Published:Updated:

ஸ்டெர்லைட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்- வைகோ

ஸ்டெர்லைட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்- வைகோ
ஸ்டெர்லைட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்- வைகோ

ஸ்டெர்லைட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்- வைகோ

ஸ்டெர்லைட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்- வைகோ

சென்னை: "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் 2010 செப்டம்பர் 28 இல் தந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் சொன்ன காரணங்களை ஏற்பதற்கு இல்லை என்றும், அதனால் அந்தத் தீர்ப்பை நிராகரிப்பதாகவும், அதே நேரத்தில் தூத்துக்குடியை அடுத்துள்ள கடலும், தீவுகளும் தேசிய கடல் பூங்கா என்று தமிழ்நாடு அரசு 1986 இல் அறிவித்ததை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு அறிவிக்குமானால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆலை குறித்து அகற்றுவது உள்ளிட்ட எந்த முடிவையும் மேற்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டார்.

44 மாதங்கள் ஒப்புதல் இல்லாமல் ஆலையை இயக்கியுள்ளதால், நிலம் நீர் பாதிப்புகளுக்கு நூறு கோடி ரூபாய் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  நஷ்ட ஈடாக ஒப்படைக்க வேண்டும். தகுந்த காரணங்களோடு கோரிக்கை வைத்தால், இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை குறித்து சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கும், ஆலையை மூடுவது உள்ளிட்ட ஆணை பிறப்பிப்பதற்கும் அனைத்து அதிகாரங்களையும் பெற்று இருக்கிறது என கூறினார். இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்காடியவர்கள், தொண்டு மனப்பாண்மையோடு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்குறிய விதத்தில் செயல்பட்டு உள்ளார்கள் என்றும் நீதிபதி கூறினார்.

##~~##
அப்போது, வைகோ வாதிடுகையில், ‘மாண்புமிகு நீதியரசர்களே, தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களைப் பாதுகாப்பதற்காக ஸ்டெர்லைட் நாசகார அழிவில் இருந்து மீட்பதற்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வந்துள்ள நான். நீதிக்காக ஏக்கமுற்று இந்த நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினேன்’ என்று கூறியவுடன், ‘நாங்கள் தீர்ப்பில் அதைக் குறிப்பிட்டு இருக்கிறோமே, மக்களுக்காகப் போராடுகிறீர்கள்; தொடர்ந்து அதைச் செய்யுங்கள்’ என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் வைகோ கூறுகையில், ‘நாங்கள் தொடர்ந்தது ஒரு யுத்தம் நடத்துகிறோம். ஒரு களத்தை இங்கே இழந்தாலும், யுத்தத்தைத் தொடருவோம். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வேன். மராட்டிய மாநிலத்தில் இரத்னகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டி, கடப்பாறையோடு ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கியதால், மராட்டிய மாநில அரசு லைசென்சை ரத்து செய்தது.
தென் தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் அப்படி தாக்குதல் நடத்தவில்லை. அறவழியில் நீதிக்காகப் போராடினோம். ஸ்டெர்லைட் மூலம் அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அடியோடு பாழாகிவிட்டது. எண்ணற்றவர்கள் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். அரசாங்க வருமானத்திற்காக தூத்துக்குடி வட்டார மக்கள் உயிர்களை பலியிடுவதா? என்பதே கேள்வி ஆகும்.
ஆலையை மூட வேண்டும் என்று மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தந்த உத்தரவை, உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று வைகோ கூறினார்.
இந்த வழக்கில் வைகோவுடன், ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், தலைமைக்கழக வழக்கறிஞர் ஆனந்த செல்வம் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் கலந்துகொண்டனர்.
அடுத்த கட்டுரைக்கு