Published:Updated:

“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”

“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”
பிரீமியம் ஸ்டோரி
“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”

தமிழிசை தடாலடி

“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”

தமிழிசை தடாலடி

Published:Updated:
“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”
பிரீமியம் ஸ்டோரி
“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”

திருச்சியில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நடத்திய நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டத்துக்கு, அடுத்த நாளே அதே இடத்தில் பதிலடி கொடுத்தது பி.ஜே.பி. அங்கு பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசிய பேச்சு மற்றும் காலி நாற்காலிகளை வைத்து மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்தார்கள், சமூக வலைதளவாசிகள். இதற்கெல்லாம் தமிழிசை என்ன பதில் சொல்கிறார் என அவரிடமே கேள்விகளை முன்வைத்தோம்.

“திருச்சி கூட்டத்தில் பெரும்பாலான நாற்காலிகள் காலியாகக் கிடந்ததாக போட்டோவும் வீடியோவும் வெளியாகியிருக்கிறதே?”

“அது உண்மையல்ல. பல தனியார் தொலைக்காட்சிகள், எங்கள் கூட்டத்தையும் எங்கள் பேச்சையும் நேரலை செய்தன. அதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசி முடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. காரணம், வெளியூரில் இருந்து பல பேர் வந்திருந்தார்கள். மழை வருவது போல இருந்தது. கூட்டம் நடப்பதற்கு முன்பும், முடிந்த பின்பும் நாற்காலிகள்தானே இருக்கும்.”

“எவ்வளவு மார்க்... எப்படி சீட் வாங்கினீர்கள் எனக் கேட்பது அநாகரிகம்!”

“உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?”

“பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஒருபோதும் தயங்கக்கூடாது என நினைப்பவள் நான்.  ஒருமையில் அசிங்கமாக, பெண் என்றும் பாராமல் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பது தவறு. அப்படிப் பேசுபவர்களின் மனநிலையை நினைத்து வெட்கப்படுகிறேன்.”

“கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவர் தயவினால்தான் உங்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்ததாகக் கூறுகிறார்களே?”

“ஸ்டாலின் அவர்களை ‘அண்ணன்’ என்றுதான் மரியாதையாகக் குறிப்பிட்டுப் பேசுவேன். அந்தச்  சபை நாகரிகம் அவர்களிடம் இல்லை. கலைஞர் போட்ட பிச்சையில்தான் நான் மருத்துவரானேன் என்கிறார் ஸ்டாலின். ஆனால், எம்.ஜி.ஆர் காலத்தில்தான் நான் மருத்துவம் படித்தேன். அது அவர்களுக்குத் தெரியாதா?”

“நீட் தேர்வைத் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கும்போது, நீங்கள் இவ்வளவு உறுதியாக ஆதரிக்கக் காரணம்?”

“ஒரு டிகிரிகூட முடிக்காதவர்கள் எல்லாம் நீட் பற்றி பேசும்போதும், ஒரு அரியர் கூட வைக்காமல் டாக்டர் படிப்பை முடித்த நான் ஏன் நீட் பற்றி பேசக்கூடாது? நான் நீட் தேர்வை ஆதரிக்கக் காரணம், அதிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றி ஒரு மருத்துவராகத் தெரிந்துவைத்திருப்பதால்தான். நீட் தேர்வு எழுத மூன்று முறை வாய்ப்புகள் தரப்படுகின்றன. எனவே, திறமை உள்ளவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்.”

“தமிழகத்தில் உள்ள கல்விமுறைதான் பிரச்னைக்குக் காரணம் என்கிறீர்களா?”

“ஆமாம். சமச்சீர் கல்வி என ஒன்றைக் கொண்டுவந்ததால், மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்பில் தமிழகத்துக்கான 3,500 சீட்டுகளில், வெறும் 30 பேர்தான் சேர்ந்துள்ளனர். சமச்சீர் கல்வி மூலமாகச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அப்படியென்றால், இவர்களின் கல்வித்தரம் எப்படி உள்ளது என்று பாருங்கள். கோடி ரூபாய் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்களில் 45 சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.”

“புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மகளின் மருத்துவ சீட் பற்றிய சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இதில், முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலபாரதி போன்ற ஒருவர் கருத்து சொல்லலாம். டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டியை நான் முழுமையாகப் பார்க்கவில்லை. ‘அப்போ எப்படி சீட் வாங்கினீர்கள்? எவ்வளவு மார்க் வாங்கினீர்கள்?’ என்று கேட்பது அநாகரிகம். அப்படித்தான் என்னையும் பலர் கேட்கிறார்கள். என் திறமையினால்தான் நான் மருத்துவம் படித்தேன். கனடா, ஆஸ்திரேலியா என என் மருத்துவப் படிப்பை முடித்தேன்.”

“நாஞ்சில் சம்பத், பி.ஜே.பி தலைவர்களைக் கடுமையாக விமர்சிக்கிறாரே?”

“அவரை ஓர் அரசியல்வாதியாகவே என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. தன் வரம்புக்கு மீறி அவர் பேசுகிறார். ‘கருத்துக்குப் பேசுகிறவர்கள் என்றால் பரவாயில்லை. காருக்காகப் பேசுகிறவர்களைப் பற்றி என்ன சொல்வது?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உங்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் கூட உங்கள் பேச்சை விமர்சிக்கிறாரே?”

“கட்சியைத் தாண்டி, சாதி ரீதியாக சிலர் யோசிப்பதால் வரக்கூடியப் பிரச்னை இது.”

“அனிதா குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பி.ஜே.பி-யினர் யாரும் ஏன் போகவில்லை?”

“நேரில் சென்று அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவது என யோசித்தபோது, அந்தச் சூழலில் போனால் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று கட்சிக்குள் கருத்து வந்தது. அதனால் போகவில்லை. ஆனாலும், எங்கள் கட்சி அலுவலகத்திலும் திருச்சி பொதுக்கூட்டத்திலும் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினோம். நிச்சயம், அனிதா வீட்டுக்கு நான் செல்வேன்.”

- வே.கிருஷ்ணவேணி
படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism