Published:Updated:

புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

Published:Updated:
புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கே உலை வைக்கப்பட்டுவிட்டது. ‘‘கட்சியின் நலன்களைவிட தங்களின் நலனுக்காக அ.தி.மு.க  சட்ட விதிகளை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாற்றிவிட்டார்கள்’’ எனக் கொந்தளிக்கிறார்கள் தொண்டர்கள்.

அ.தி.மு.க தொடங்கப்பட்டபோது, மொத்தம் 46 சட்ட விதிகள் உருவாக்கப் பட்டன. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் சட்ட விதிகளில் 24-க்கும் மேற்பட்ட திருத்தங்களைச் சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் கொண்டுவந்துள்ளார்கள். தினகரனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க, ‘பொதுச்செயலாளர் பதவியே இனி அ.தி.மு.க-வில் இல்லை’ என்ற விதியையும் உருவாக்கிவிட்டார்கள்.

‘கழக சட்டதிட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் பெற்றது. ஆனால், இந்தச் சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக   உருவாக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளரைப் பொது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல’ எனச் சட்ட விதி 43-ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த விதியை மாற்றிவிட்டார்கள். பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் உள்ள இடங்கள் அனைத்திலும் ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ எனச் சட்ட விதிகளைத் திருத்திவிட்டனர்.

புதைக்கப்பட்ட (பொதுச்செயலாளர்) அ.தி.மு.க!

அதே போல, சட்ட விதி 20-தான் பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தைப் பற்றி சொல்லியுள்ளது. ‘நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் பொதுச்செயலாளர்தான்...’ என்று ஆரம்பித்து, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்குவதற்கான அனுமதிப் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் வரை, 12 பிரிவுகளில் பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களைப் பட்டியலிட்டிருந்தனர்.

திருத்தப்பட்ட சட்ட விதியில், ‘பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படும்’ என மாற்றியுள்ளனர். பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்குத்தான் இதுவரையில் இருந்தது. இப்போது, பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்தே கூட்ட முடியும் என்று திருத்திவிட்டனர்.

இந்தத் திருத்தங்களில் வேறு சில குழப்பங்களும் எழுந்துள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால், பொதுக்குழுவை யார் கூட்ட முடியும் என்ற தெளிவு இதில் இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவாக அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்தால், இணை ஒருங்கிணைப்பாளர் நிலை என்னவாகும் என்பது போன்ற விவகாரங்களுக்குப் பதில் கிடையாது. உறுப்பினர் அட்டை முதல் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஃபார்ம் பி வரையில் அனைத்திலுமே, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமே கையெழுத்திட வேண்டும் என்பது ஒரு கட்சிக்குச் சாத்தியப்பட்ட விஷயமா என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சட்ட விதிகளை, உடனடியாக  நடைமுறைப்படுத்தவும் முடியாது. காரணம், பொதுக்குழு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், 23-10-2017 வரை பொதுக்குழுத் தீர்மானங்கள் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலையை, சென்னை உயர் நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இதையே தினகரன் தரப்பு தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, இந்தப் பொதுக்குழு சட்ட விதிகளை மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறது.

அ.தி.மு.க-வின் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக தினகரன் தரப்பினர் வழக்குத் தொடரவுள்ளனர். தினகரன் தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன் நம்மிடம், “அ.தி.மு.க-வின் சட்ட விதி 43-ல் கழக சட்டதிட்ட விதிகளை இயற்றவும் திருத்தவும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் பெற்றது.ஆனால், பொதுச்செயலாளரைக் கழகப் பொது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல என்பதையே மாற்றியுள்ளார்கள். இதைத் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் அ.தி.மு.க என்ற கட்சியையே கலைத்துவிட வேண்டும். இதையே நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.

விதி 42-ன் படி, சட்டதிட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரும் உரிமை பொதுச்செயலாளருக்கு உண்டு என்பதைத் திருத்தி ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டால் யார்  அதிகாரமிக்கவராக செயல்படுவார் என்கிற கேள்வி எழும். அதே போல், பொதுச்செயலாளர் பதவியைத் துடைத்தெறிய முயன்றால், கட்சியின் அடிமட்டத் தொண்டன் வரை கேட்டுவிட்டுத்தான் செய்யமுடியும். அதையும் அவர்கள் செய்யவில்லை. இவற்றையெல்லாம் நீதிமன்றத்தில் நாங்கள் முறையிடுவோம்” என்றார்.

“பணமும், அதிகாரமும் இருப்பவர்கள் எக்காலத்திலும் கட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது. மாறாக, தொண்டர் செல்வாக்கு உள்ளவரே பொதுச்செயலாளராக வேண்டும். அதனால்தான் தொண்டர்கள் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

எம்.ஜி.ஆரை மறந்தவர்களுக்கு, அவர் கொண்டுவந்த சட்டமா நினைவில் இருக்கப் போகிறது?

‘அம்மா வழியில் நடக்கும் அரசு’ எனச் சொன்னவர்கள் அம்மா உட்கார்ந்த பதவியையே காலி செய்துவிட்டார்கள்.

- அ.சையது அபுதாஹிர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism