Published:Updated:

“வெட்கம், மானம் இல்லாத எடப்பாடி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“வெட்கம், மானம் இல்லாத எடப்பாடி!”
“வெட்கம், மானம் இல்லாத எடப்பாடி!”

“வெட்கம், மானம் இல்லாத எடப்பாடி!”

பிரீமியம் ஸ்டோரி

‘நீட்’ எதிர்ப்பு, ‘‘மாமியார் வீட்டுக்குப் போவார் தினகரன்’’ என்ற எடப்பாடியின் ஆவேசம், ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சி என அரசியல் பரபரப்பாகிக் கிடந்த நிலையில் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் சத்தமே இல்லாமல் மாநாடு, பொதுக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கின்றன. அந்த மூன்று நிகழ்ச்சிகளில் என்ன நடந்தது? 

“வெட்கம், மானம் இல்லாத எடப்பாடி!”

ருணாநிதி பங்கேற்காமல் நடக்கும் முதல் முப்பெரும் விழாப் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

முப்பெரும் விழாவை மாநாடு போல நடத்தினார்கள். விழாவில் பேசிய, துணைப் பொதுச்செயலாளர் திண்டுக்கல் பெரியசாமி, ‘‘2005-ம் ஆண்டு திண்டுக்கல்லில் தி.மு.க மாநாடு நடத்தினோம். 2006-ம் ஆண்டு, ஆட்சியை தி.மு.க கைப்பற்றியது. இப்போது, இங்கு முப்பெரும் விழாவை நடத்தியுள்ளோம். தமிழகத்தைக் கொள்ளைக் கூடாரமாக மாற்றிய அ.தி.மு.க ஆட்சியை அகற்றுவதற்கு அச்சாரமாக இந்த விழா அமைந்துள்ளது. விரைவில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வின் ஆட்சி மலர்வது உறுதி’’ என்றார்.

வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் அன்பழகன், ‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, தலைவர் கருணாநிதி உடல்நிலை குன்றிய நிலையில், ‘எனக்குப் பிறகு தி.மு.க-வின் தலைமைப் பதவிக்கு வருபவர் யார்? தமிழகத்தை, மக்களை வழிநடத்திச் செல்பவர்கள் இருக்கின்றனரா? அதற்கு யாரை நியமிக்கலாம்?’ எனத் தயங்கியபடியே என்னிடம் கேட்டார். அப்போது நான், ‘உங்களுக்குப் பிறகு இயக்கத்தை வழிநடத்தக்கூடியவர் உங்களைப் போன்று பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறைச்சென்ற ஸ்டாலின் மட்டுமே. அவரையே நீங்கள் நியமிக்கலாம்’ என்றேன். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தைக் காப்பாற்றக்கூடியவர் ஸ்டாலின் மட்டுமே. கருணாநிதியைப் போலவே கட்சிக்காக, திராவிடத்துக்காக, தமிழ்மொழிக்காகப் பாடுபட்டுவருகிறார் ஸ்டாலின்” என்றார்.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ‘‘ஐ.பெரியசாமி, இந்த விழாவை இவ்வளவு பிரமாண்டமாக நடத்துவார் என்று தெரிந்திருந்தால், இதை இரண்டு நாள் நிகழ்வாக, ஒரு மாநாடாகவே நடத்தியிருக்கலாம்” என்று ஐ.பெரியசாமியைப் பாராட்டினார். தொடர்ந்து பேசியவர் ‘‘என்னைப் பார்த்து, முதல்வராக முடியவில்லை என்று சொல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மைனாரிட்டியாக இருந்துகொண்டு முதல்வராக இருக்க எடப்பாடிக்கு வெட்கம், மானம் இல்லையா? நீங்கள் மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டு, கேள்வி கேளுங்கள். உங்கள் தெருமுனைக்கு வந்து பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். நீங்கள் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயாரா?” என்று கேட்டார்.

- ஆர்.குமரேசன்
படம்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு