Published:Updated:

“என்னிடம் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ கூட இல்லை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“என்னிடம் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ கூட இல்லை!”
“என்னிடம் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ கூட இல்லை!”

“என்னிடம் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ கூட இல்லை!”

பிரீமியம் ஸ்டோரி

‘நீட்’ எதிர்ப்பு, ‘‘மாமியார் வீட்டுக்குப் போவார் தினகரன்’’ என்ற எடப்பாடியின் ஆவேசம், ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சி என அரசியல் பரபரப்பாகிக் கிடந்த நிலையில் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் சத்தமே இல்லாமல் மாநாடு, பொதுக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கின்றன. அந்த மூன்று நிகழ்ச்சிகளில் என்ன நடந்தது? 

“என்னிடம் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ கூட இல்லை!”

வ்வோர் ஆண்டும் அண்ணா பிறந்தநாளன்று ஏதோ ஒரு நகரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்துவது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கம். கடந்த 11 ஆண்டுகளாக, தி.மு.க மீது கடும் கோபத்தில் இருந்த வைகோ, அதிலிருந்து மனம் மாறிய சூழ்நிலையில் இந்த ஆண்டு நடந்த கூட்டத்துக்கு  எதிர்பார்ப்பு கூடியிருந்தது. கருணாநிதியுடன் சந்திப்பு, முரசொலி விழாவில் பங்கேற்பு ஆகியவற்றைத் தொடர்ந்து தி.மு.க-வுடன் கூட்டணி பற்றிய அறிவிப்பை தஞ்சாவூரில் வைகோ வெளியிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வைகோ அப்படி அறிவிக்காவிட்டாலும், தி.மு.க-வுக்குப் பச்சைக்கொடிக் காட்டும் சிக்னல் பலரது பேச்சுகளில் தெரிந்தது.

“பெரியார் இல்லை. அண்ணா இல்லை. கலைஞர், செயல்படும் நிலையில் இல்லை. வைகோ அவர்களே நீங்கள்தான் இருக்கிறீர்கள்” என்று அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செந்திலபதிபன் சொல்ல... ‘சர்பிட்டி தியாகராயரும், நடேசனாரும், டி.எம்.நாயரும், பெரியாரும், அண்ணாவும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரும் கட்டிக்காத்த இயக்கத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் சொல்ல... இறுதியாக மைக் பிடித்த வைகோ, தி.மு.க-வை வருடிவிட்டு, மெல்லக் கிள்ளியும் விட்டார்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட வைகோ, அதில் கருணாநிதி, அன்பழகன், மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி ஆகியோரின் பெயர்களை மறக்காமல் குறிப்பிட்டார். “எனக்கு முன்னால் பேசிய மல்லை சத்யா, கலைஞரை முத்தமிழறிஞர் என்று குறிப்பிட்டார். ஒரு ரகசியத்தை நான் சொல்கிறேன். கலைஞருக்கு விருது வழங்க இந்திய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தஞ்சைக்கு வந்தபோது, அவரது உரையை நான்தான் தயாரித்துக் கொடுத்தேன். அதில் முத்தமிழறிஞர் என்று குறிப்பிட்டேன். சிஷ்யனுக்கு, குரு பட்டம் சூட்டியது உண்டு. ஆனால், குருவுக்குப் பட்டம் சூட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதுவரை இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லியதில்லை” என்றார் வைகோ.

தாம் மும்பை சென்றிருந்ததாகவும், அங்கு வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்ட வைகோ, “ ‘இந்திய அளவில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை நீங்கள் உருவாக்க வேண்டும்’ என்று ஜெத்மலானி என்னைப் பார்த்துச் சொன்னார். ‘என்னிடம் ஒரு எம்.பி., ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை’ என்றேன். ‘நீங்கள் என்னோடு இருந்தால் போதும்’ என்றார். இதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை” என்ற வைகோ, மோடியையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. மீதான விமர்சனங்களைத் தவிர்த்த வைகோ, ‘‘நான் எதையும் சொல்லப் போவதில்லை” என்று மர்மமாக முடித்தார்.

- குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு