Published:Updated:

“நான்... ட்ராக்டர் ஓட்டியிருப்பேன்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நான்... ட்ராக்டர் ஓட்டியிருப்பேன்!”
“நான்... ட்ராக்டர் ஓட்டியிருப்பேன்!”

“நான்... ட்ராக்டர் ஓட்டியிருப்பேன்!”

பிரீமியம் ஸ்டோரி

‘நீட்’ எதிர்ப்பு, ‘‘மாமியார் வீட்டுக்குப் போவார் தினகரன்’’ என்ற எடப்பாடியின் ஆவேசம், ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சி என அரசியல் பரபரப்பாகிக் கிடந்த நிலையில் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் சத்தமே இல்லாமல் மாநாடு, பொதுக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கின்றன. அந்த மூன்று நிகழ்ச்சிகளில் என்ன நடந்தது? 

“நான்... ட்ராக்டர் ஓட்டியிருப்பேன்!”

பா.ம.க நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பதை மாற்றி, விழுப்புரத்தில் நடைபெற்ற பா.ம.க-வின் சமூக நீதி மாநாடு, அமைதியாக நடந்து முடிந்தது.

1987-ல் நடந்த இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ம் தேதி, பா.ம.க அஞ்சலி செலுத்திவருகிறது. இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சியை, விழுப்புரத்தில் சமூக நீதி மாநாடாக பா.ம.க நடத்தியது. வன்னியர் சங்கத் தலைவர் குரு முன்னிலை வகித்தார். ராகுகாலம் முடிந்து மாலை ஆறு மணிக்கு மேல் பா.ம.க நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும் மேடைக்கு வந்தார்கள். இருவரும், போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

  மேடையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு, மேடைக்கு வந்தனர். மைக் பிடித்த அன்புமணி, “தம்பிகளே... எல்லோரும் எழுந்திருந்து கைகளை மேலே உயர்த்துங்கள்” என்றார். அனைவரும் எழுந்தவுடன், “தமிழ்நாட்டில் நாங்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவருவோம். இது சத்தியம்...” என்று அவர்களை உறுதிமொழி எடுக்கவைத்தார், அன்புமணி. 
பின்னர் பேசிய அவர், “இங்கு பெரியார் இல்லையென்றால், தமிழகத்தின் எங்கோ ஒரு மூளையில் ஐயா கலப்பையைத் தூக்கிக்கொண்டு விவசாயம் பார்த்திருப்பார். நான், அவருடன் ட்ராக்டர் ஓட்டியிருப்பேன். ஆனால், பெரியார் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டால், நாங்கள் மருத்துவர்களாக ஆனோம். மாநில சுயாட்சி மலர வேண்டும்” என்றார்.

கடைசியாகப் பேசிய ராமதாஸ், “வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதையும், அதை மக்கள் வாங்குவதையும் மாற்றாமல், மாற்றம் வராது. அன்புமணிக்கு நிகராக இங்கு இளம் தலைவர்கள் யாருமில்லை. அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்று முடித்தார்.

குருவின் பேச்சைக் கேட்க மாலை மூன்று மணியிலிருந்தே இளைஞர்கள் காத்துக்கிடந்தனர். அவர்களை ஏமாற்றும் விதமாக, அமைதியாகப் பேசிவிட்டு அமர்ந்தார், குரு. அதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, ‘‘தேவையில்லாத விஷயங்களைப் பேசி பரபரப்பும் சர்ச்சையையும் கிளப்ப வேண்டாம் என்று குருவுக்கு அய்யா கட்டளையிட்டார். அதுதான் அவரது அமைதியான பேச்சுக்குக் காரணம்’’ என்கிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். எந்தப் பிரச்னையும் இல்லாததால் போலீஸார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

- க.பூபாலன்
படம்: தே.சிலம்பரசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு