Published:Updated:

கிலோ ரூ. 20 க்கு வெளிச்சந்தையில் அரிசி: ஜெ. அறிவிப்பு!

கிலோ ரூ. 20 க்கு வெளிச்சந்தையில் அரிசி: ஜெ. அறிவிப்பு!
கிலோ ரூ. 20 க்கு வெளிச்சந்தையில் அரிசி: ஜெ. அறிவிப்பு!
கிலோ ரூ. 20 க்கு வெளிச்சந்தையில் அரிசி: ஜெ. அறிவிப்பு!

சென்னை: அரிசி விலையை கட்டுப்படுத்த கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் என்ற விலையில் வெளிச் சந்தையில் அரிசி விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விலைவாசி உயர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசின் தவறான கொள்கைகளே தற்போதைய விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதிலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதிலும், எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. இந்த அடிப்படையில், கீழ்க்காணும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது.

* பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு, 20 கிலோ, விலையில்லா அரிசி முழுமையாகவும்
தட்டுப்பாடு இன்றியும் வழங்கப்படுகிறது.

##~~##
* தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை ஆகியன பொய்த்ததாலும், கர்நாடகம், காவேரியில்
தண்ணீர் திறந்து விடாததாலும், எதிர்பார்த்த அளவு நெல் மகசூல் இல்லை. எனவே, வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளது. வெளிச் சந்தையில் விற்கப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து, 25 கோடி ரூபாய் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, ஒதுக்கப்பட்டுள்ளது.
*. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், ஒப்பந்த புள்ளிகள் வழியாக வெளிச் சந்தையில் 10,000
மெட்ரிக் டன் சன்னரக அரிசி கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி அனைத்தும் வெளிச் சந்தையில் நுகர்வோருக்கு அடக்க விலையில் வழங்கப்படும்.
* அரிசி விலையை, உடனடியாக கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் என்ற விலையில் வெளிச் சந்தையில் விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த விற்பனை துவக்கப்படும்.
* வெளிச்சந்தையில் 57 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பாமாயில் சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும், வெளிச்சந்தையில் 76 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்கப்படும் உளுத்தம்பருப்பு, 30 ரூபாய்க்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.இதற்காக ஆண்டு ஒன்றுக்கு 1,006 கோடி ரூபாய் அளவுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்தத்திட்டம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
* ஏழை, எளியோர், நலன் காக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்கள் திட்டம், இதர மாநகராட்சிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.