Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘சாலைகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்தாதவரை வந்தே மாதரம் சொல்ல நமக்கு உரிமையில்லை’ எனப் பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?


சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தி பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் இன்னமும் பொதுக் கழிப்பிடங்கள் இல்லை.அதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது பேச்சு, மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வையும் மன மாற்றத்தையும் ஏற்படுத்தும்; ஏற்படுத்த வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால், இதற்கும் வந்தே மாதரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘தி.மு.கதான் எங்களது பிரதான எதிரி. அவர்களுடன் கூட்டுச் சேர்வது இன்றல்ல, என்றுமே நடக்காது’ என்று தினகரன் சொல்கிறாரே?

இது உண்மையென்றால் என்ன அர்த்தம்? எடப்பாடியும் தினகரனும் போட்டுக்கொள்வது பொய்ச் சண்டையோ?

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘எடப்பாடிக்குப் பின்னால் மத்திய அரசு இருக்கிறதா எனத் தெரியவில்லை’ என்கிறாரே தினகரன்?


 ஏற்கெனவே ஏதோ சொல்லி மாட்டிக்கொண்டார். திஹார் வரைக்கும் கொண்டு போய் வைத்து விட்டார்கள். அடுத்து ஏதாவது சொல்லி மாட்டிக்கொள்ளக் கூடாது என்று தினகரன் நினைக்கிறார். அவ்வளவுதான். மத்திய அரசோ, டெல்லி பி.ஜே.பி தலைமையோ ஆதரவாக இல்லாமல் எடப்பாடிக்கு இவ்வளவு தைரியம் வருமா? இதைத் தினகரன்தான் விளக்க வேண்டும். இதைச் சொல்லும் தைரியம்கூட தினகரனுக்கு இல்லாமல் போனதுதான் அவரது வீழ்ச்சி.

கழுகார் பதில்கள்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

சசிகலா நீக்கம் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லலாமா?


ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் தோற்றுப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். தான் முதலமைச்சர் பதவியில் உட்காருவதற்காகத்தான் தர்மயுத்தம் தொடங்கினார் பன்னீர். அது அவருக்குக் கிடைக்கவில்லை. பொதுச்செயலாளர் பதவியையாவது பெற்றுவிடலாம் என்று நினைத்தார். அதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிறகு எப்படி தர்மயுத்தத்தில் வென்றார் என்று சொல்ல முடியும்?

பொதுவாகவே அரசியல்வாதிகள் ‘தர்மயுத்தம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமை வெற்றி பெறுமா?


ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்ஸைக் கேட்கிறீர்களா, மோடி - அமித்ஷாவைக் கேட்கிறீர்களா?

ப.தங்கவேலு, பண்ருட்டி.

அனிதா இரங்கல் கூட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியது சரியா?


‘நீங்கள் தமிழன் தமிழன் என்று பேசுகிறீர்கள், ஆனால் தமிழர்கள் சாதியாகத்தான் பிரிந்திருக்கிறார்கள்’ என்று இயக்குநர் இரஞ்சித் சொன்ன கருத்து சரியானது. ஆனால், சொன்ன இடம் தவறானது. அதற்கான மேடை அது அல்ல. மேலும், கருத்தைச் சொன்ன தொனியும் அவரது உடல்மொழியும் தவறானது.

கழுகார் பதில்கள்!

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிக்கு அச்சாரமாக மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு ஓர் அமைச்சர் பதவியைப் பிரதமர் மோடி தந்திருக்கலாமே?


அப்படிக் கொடுத்தால் எடப்பாடி ஆட்சிக்கு ஏற்படும் கெட்ட பெயரில் பாதி பி.ஜே.பி-க்கும் நேரடியாக வந்துவிடும் என்பதை மோடி அறியமாட்டாரா? அமைச்சர் பதவியைக் கொடுப்பதன் மூலம் நேரடி ஆட்சியே நடப்பதாகக் குற்றம்சாட்டி விடுவார்களே? எனவே அந்தக் காரியத்தைச் செய்ய மாட்டார்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

அரசியலை மிகவும் கேவலப்படுத்திக் கொண்டிருப்பது எது?

மானத்தைப் பற்றிக் கவலைப்படாத தன்மைதான்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

ரஜினியும் கமலும் அரசியலில் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்படுவார்களா?

கமல் அழைப்பு விடுத்துவிட்டார். ரஜினிதான் பதில் சொல்லவில்லை.

போஸ்டல் ராஜ், புதுச்சேரி.

இனி சசிகலா குடும்பத்தின் நிலை என்ன?

அரசியலைப் பொறுத்தவரை அதோகதிதான்!

ச.புகழேந்தி, மதுரை-14.

தற்கொலைகளை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை?


பொது நோக்கத்துக்காகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ தற்கொலை செய்துகொள்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விரக்தி, கோபம், இயலாமை காரணமாகத்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தன்னம்பிக்கை ஊட்டும் கல்வி, வாழ்க்கை முறை, குடும்ப ஆறுதல் ஆகியவை அமைந்தால் தற்கொலைகளைக் குறைக்கலாம். பொதுவாகவே இந்தியாவில் மனநல பாதிப்புகளை நாம் ஒரு முக்கியமான பிரச்னையாகக் கருதுவதில்லை. அதையும் ஒரு நோயாக உணர்ந்து, தீர்வு தேடுவது அவசியம்.

படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, ப.சரவணக்குமார், வி.ஸ்ரீனிவாசலு

கழுகார் பதில்கள்!

இன்றைய சூழ்நிலையில் இந்தச் சட்டமன்றம் நிலைக்குமா? அல்லது ஜனாதிபதியால் இடை நீக்கம் செய்யப்படுமா?

ந்தச் சட்டமன்றம் நிலைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. 134 உறுப்பினர்கள் பலத்துடன் இருந்த அ.தி.மு.க-விலிருந்து 11 பேரைப் பிரித்துச் சென்றார் பன்னீர். இதனால் அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. இப்போது இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்துவிட்டதாக அவர்கள் சொன்னாலும், இதனைத் தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பிரச்னையின்போது பொதுச்செயலாளர் என்ற இடத்தில் கையெழுத்துப்போட்ட சசிகலாவை இவர்கள் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் என்ற பதவியைக் காலி செய்துவிட்டார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏற்குமா எனத் தெரியவில்லை.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்துள்ளார் சபாநாயகர் தனபால். இதனால் ஆட்சியின் பலம் குறைந்துவிட்டது. சட்டமன்றத்தில் குட்காவைக் காட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 21 பேரை சஸ்பெண்ட் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்ற எடப்பாடியின் நினைப்புக்கு நீதிமன்றம் தடை விதித்து விட்டது. ‘இன்னும் 12 எம்.எல்.ஏ-க்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள்’ என்று தினகரன் சொல்வதால், மேலும் சிலர் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கலாம். ஆடும் நாற்காலி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அடங்கிவிடலாம் என்பதே இப்போதைய நிலை. 

ஜனாதிபதியை ஒருமுறையும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இரண்டு முறையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்று சந்தித்துள்ளார். ஜனாதிபதியைச் சந்தித்தது சட்டபூர்வமான ஆலோசனை என்று சொல்லலாம். ‘சட்டமன்றத்தைத் தற்காலிகமாக முடக்கி வைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதனால்தான் உள்துறை அமைச்சரைச் சந்தித்தார் ஆளுநர்’ என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.

கலைப்போ, கவிழ்ப்போ நடக்கப் போவது உறுதி. ‘அவர்கள் செய்யப் போகிறார்களா... இவர்களே செய்துகொள்ளப் போகிறார்களா?’ என்பது விரைவில் தெரிந்துவிடும்.

 கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!