“தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என முதல்வரிடமே மனு கொடுத்திருந்தால், சட்டப்படி தவறில்லை. ஆனால், கவர்னரிடம் அவர்கள் மனு அளித்ததுதான் தவறு. முதல்வரை மாற்ற வேண்டுமென்று சொன்னாலே, அரசை மிரட்டுவது போல்தான்” என்கிறார், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினோம்.

“18 எம்.எல்.ஏ-க்கள், தகுதிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பதே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் ஸ்திரத்தன்மைக்காக ஏற்படுத்தப்பட்டதுதான். அரசு இயந்திரம் உறுதியுடன் செயல்பட இந்தச் சட்டம் அவசியம். இந்தச் சட்டத்தை இந்த விஷயத்தில் பயன்படுத்தியது சரிதான்.”

“சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை சட்டப்படி சரிதானா?”

“அந்த 18 உறுப்பினர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகவே கருதி, சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஏனெனில், அவர்கள் தனித்துச் செயல்பட ஆரம்பித்துள்ளனர். கட்சியின் தலைமையிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. கட்சியின் பொதுக்குழு கூட்டம், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் என எதற்கும் வராமல் புறக்கணித்துள்ளனர். கட்சியுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டுள்ளனர். இதுவே சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டதுதான். நீதிமன்றத்தில் தி.மு.க போட்ட வழக்கில் இவர்களும் இணைந்துள்ளனர். அப்படியென்றால், மறைமுகமாக தி.மு.க-வுடன் புரிந்துணர்வில் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? இதைத்தான், சபாநாயகர் தன் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்”

“சட்டசபை நடவடிக்கைக்கு உட்பட்டுதானே கொறடாவின் உத்தரவு இருக்கமுடியும்?”

“அப்படியல்ல. உத்தரகாண்ட் விவகாரத்தில், ஒன்பது காங்கிரஸ் உறுப்பினர்கள் கவர்னரிடம் மனு கொடுக்கச் சென்றனர். அவர்களுடன் சேர்ந்து பி.ஜே.பி உறுப்பினர்கள் சென்றதற்கே கட்சித்தாவல் தடைச் சட்டம் பாய்ந்தது. 18 உறுப்பினர்கள் விவகாரத்தில், ஆவணங்களும் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. இதை வைத்துத் தகுதிநீக்கம் செய்வதற்கு சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது.”

“சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக 18 உறுப்பினர்களும் நீதிமன்றம் சென்றுள்ளார்களே?”

“முன்பெல்லாம், சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது. நான், 33 உறுப்பினர்களை ஒரே நேரத்தில் தகுதிநீக்கம் செய்தபோது, சபாநாயகர் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாத நிலைதான் இருந்தது. ‘சபாநாயகர் தீர்ப்பே இறுதியானது. நீதிமன்றம் தலையிட முடியாது’ என 10-வது அட்டவணையில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம் என்று 1992-ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டுவந்தனர். அதன் அடிப்படையில்தான், 18 பேரும் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். இந்த வழக்கு விசாரணை முடிவடைவதற்கு ஓராண்டு ஆகிவிடும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சபாநாயகர் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க முடியாது.”

“முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்காக இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுத்தது சரிதானா?”

“ஆமாம்! முதல்வரை மாற்ற வேண்டும் என்று சொன்னாலே அரசையே மிரட்டுவது போல்தான். இவர்கள், எதிர்க் கட்சியினருடன் மறைமுகமாகக் கைகோத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதே போல், சட்டசபையின் நடவடிக்கையில் கவர்னர் நேரடியாகவும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவைப் பொறுத்தே கவர்னரின் நடவடிக்கையும் இருக்கும். ‘சட்டசபை உறுப்பினர்கள் விதிமுறை’யைப் படிக்காமலே உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சபாநாயகரின் வார்த்தைதான் சட்டமன்றத்தின் சட்டம் என்பதே உண்மை.”

“தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது பாய்ந்த தகுதிநீக்கம், எடப்பாடி ஆட்சியை எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்கள்மீது ஏன் பாயவில்லை?”

“பன்னீர்செல்வம் பிரச்னையையும், இதையும் ஒப்பிடவே முடியாது.”

“கவர்னரிடம் எம்.எல்.ஏ-க்கள் மனு கொடுத்தது தவறா?”

“தவறுதான். முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்தான் சொல்ல வேண்டும். பிரிட்டிஷ் சட்டத்தைப் பின்பற்றித்தான் நம் சட்டம் உள்ளது. அதன்படி, சட்டசபைக்குள் எழும் பிரச்னைகளை சபாநாயகர்தான் கவர்னரிடம் சொல்ல வேண்டும். இந்த உறுப்பினர்கள், முதல்வரை மாற்ற வேண்டும் என்று முதல்வரிடமே மனு கொடுத்திருந்தால் சட்டப்படி தவறில்லை. இவர்கள் சட்டத்தை மீறியதால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.”

- அ.சையது அபுதாஹிர்
படம்: அசோக்குமார்