Published:Updated:

தினகரனுக்கு ஒரு நீதி... பன்னீருக்கு ஒரு நீதியா? - பரபரப்பைக் கிளப்பும் ராஜன் செல்லப்பா

தினகரனுக்கு ஒரு நீதி... பன்னீருக்கு ஒரு நீதியா? - பரபரப்பைக் கிளப்பும் ராஜன் செல்லப்பா
பிரீமியம் ஸ்டோரி

தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் எடப்பாடி அணியில் இன்னும் தொடர்கிறார்களோ என நினைக்கும் அளவுக்கு, ராஜன் செல்லப்பா கூறிவரும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

மதுரையில் செப்டம்பர் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான ராஜன் செல்லப்பா, ‘‘எத்தனை நாள்கள் ஆட்சியில் இருக்கப்போகிறோம் என்பதைவிட, மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் நோக்கம். மதுரையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்றும், வைகையில் கட்டப்பட்டுள்ள இரண்டு பாலங்களுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்கள் வைக்கப்படும் என்றும் அறிவித்தார். இன்னும் அதற்கு அரசாணை வெளியிடவில்லை.

தினகரனுக்கு ஒரு நீதி... பன்னீருக்கு ஒரு நீதியா? - பரபரப்பைக் கிளப்பும் ராஜன் செல்லப்பா

மதுரை கலெக்டர் அலுவலகம் விரிவாக்கப்படும்; வண்டியூர் கண்மாய் தூர்வாரப்படும் என நிறையத் திட்டங்களை அறிவித்தார். இதுவரை ஒரு திட்டத்துக்குக்கூட நிதி ஒதுக்கவில்லை. முதல்வரிடம் பலமுறை நேரடியாகச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படியிருந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள். என் தொகுதி உள்பட பல தொகுதிகளில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட எந்தத் திட்டமும் செயல்படவில்லை’’ என முதல்வர் மீது புகார்களை அடுக்கினார்.
ராஜன் செல்லப்பாவிடம் பேசினோம்.

 “18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாகக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கலாம். அவர்கள் சுயேட்சை எம்.எல்.ஏ-க்களாக செயல்பட்டிருப்பார்கள். தினகரன் தரப்பும், எடப்பாடி தரப்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதற்கு முன்பு இப்படி கடுமையாகப் பேசிய ஓ.பி.எஸ்., தற்போது ஒன்றாக இணைந்து செயல்படுகிறார். அதுபோல, தினகரனும் எங்களுடன் இணைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும். இப்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லாவிட்டாலும், அப்படி ஒரு நிலைவந்தால், நானே முன்னின்று இணைப்புப் பணியைச் செய்வேன். ஸ்லீப்பர் செல் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. நானே சுயமாக முடிவெடுப்பேன்’’ என்றவரிடம்,

‘‘அமைச்சர் பதவிக்காகத்தான் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்கிறீர்களா?’’ என்றோம். ‘‘எந்தப் பதவியும், கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கத்தில்தான் பேசினேன். உள்கட்சி விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா? மக்கள் அனைத்தையும் கவனித்து வருகிறார்கள். அதனால் அறிவித்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் வெளிப்படுத்தினேன். இதில் உள் நோக்கம் எதுவுமில்லை’’ என்றார்.

- செ.சல்மான், படம் : ஈ.ஜெ.நந்தகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!