Published:Updated:

“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”

“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”

தினகரனின் மலைக்கோட்டை மாஸ்!

“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”

தினகரனின் மலைக்கோட்டை மாஸ்!

Published:Updated:
“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மிகப்பெரும் கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டியிருக்கிறார்,  தினகரன். 

நீட் எதிர்ப்புப் பொதுக் கூட்டத்துக்கு செப்டம்பர் 16-ம் தேதி நாள் குறித்தார்கள். ஆனால், கூட்டம் நடத்த திருச்சி மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனர் அனுமதி மறுக்கவே, 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்போதும், ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாக, அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. ‘அரங்கத்தை மறுசீரமைப்புச் செய்கிறோம்’ என்று சொல்லி அரங்கின் முன்பக்கத்தை இடிக்க ஆரம்பித்தனர். ஆனாலும், உயர் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கியது தினகரன் தரப்பு. முந்தைய இரவுவரை போலீஸார் கெடுபிடி அதிகமாக இருந்தது. கூட்டத்துக்கு வரும் வாகனங்களின் பதிவெண்கள், தொண்டர்களை அழைத்துவரும் நிர்வாகிகளின் பெயர் பட்டியல், தொடர்பு எண்கள் என 40 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டது, திருச்சி போலீஸ். பெரும் போராட்டத்துக்குப் பிறகு, சில இடங்களில் மட்டும் கட் அவுட் வைக்க அனுமதி வாங்கினர்.

“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”

முந்தைய நாளே திருச்சி வந்து, சங்கம் ஹோட்டலில் தங்கிய தினகரன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பிறகு, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து கருமண்டபத்தில் தன்னுடைய தந்தை விவேகானந்தனைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். மறுநாள் மகாளய அமாவாசை. அன்றைய தினம், ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றார். அப்போதுதான், ப.குமார் எம்.பி-க்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில், தினகரன் மற்றும் நடிகர் செந்தில் ஆகியோரைக் கைதுசெய்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. கூட்டத்தைப் பிரமாண்டமாகக் காண்பிக்க, லைவ் ஏற்பாடுகளை இளவரசி மகன் விவேக் கவனித்தார்.

முறையான பாதுகாப்பு வழங்கப்படாததால், தினகரன் வந்த பாதையில் தொண்டர்கள் குவிய, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேடையேறிய தினகரன், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த அனிதா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, “18 சட்டமன்ற உறுப்பினர்களை ஏன் தகுதிநீக்கம் செய்தீர்கள்? அவர்களுக்குத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கிடைக்க, ஃபார்ம் பி-யில் கையெழுத்துப் போட்டது அம்மாதான். ஆனால், சின்னத்தை முடக்கச் சொன்னவர் பன்னீர்செல்வம். ‘தினகரனை மாமியார் வீட்டுக்கு அனுப்புவேன்’ என எடப்பாடி தைரியமாகச் சொல்வதற்குக் காரணம், சாமியாரின் ஆசி. நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்த கட்சி. மோடிக்கு எச்சரிக்கை” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாங்கள் அத்வானிக்கே அல்வா கொடுத்தவங்க!”

பின்னர் மைக் பிடித்த தினகரன், “தன் கடைசி உயிர்மூச்சுவரை, நீட் வேண்டாம் என்பதில் அம்மா உறுதியாக இருந்தார். அவர்தான் 69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்று, சமூகநீதியில் தமிழகத்துக்கு முதலிடம் பெற்றுத்தந்தார். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்துசெய்தார். இதனால்தான், கிராமப்புற, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவர்களாக முடிந்தது. ஆனால், பல ஏழை மாணவர்களின் கனவை, நீட் தேர்வுப் பறித்துவிட்டது. நீட் தேர்வை இறுதிவரை எதிர்ப்போம்” என்றவர் அரசியலும் பேசினார். ‘‘எடப்பாடிக்கு எதிராகப் போராடும் 21 எம்.எல்.ஏ-க்களும் போராளிகளாகச் செயல்படுகிறார்கள். கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் அவைத்தலைவர் போலச் செயல்படுகிறார். எட்டப்பனின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்’’ எனப் பேச்சை முடித்தார்.

சமீபகாலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த அளவுக்குக் கூட்டத்தைக் கூட்டியதில்லை எனச் சொல்லும் அளவுக்கு, உழவர் சந்தை மைதானம் திமிலோகப்பட்டது. ‘பத்தாயிரம் தொண்டர்கள் வந்தனர்’ என உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. எடப்பாடி வயிற்றில் புளியைக் கரைத்தது மட்டுமல்ல கிலியையும் ஏற்படுத்திவிட்டது திருச்சி கூட்டம்.

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: என்.ஜி.மணிகண்டன்