Published:Updated:

"வாய் வீங்கிப் போச்சு கூட்டத்துக்கு போகல" : தலைமைக்கு தமாஷ் பதில் கொடுக்கும் அழகிரி தி.மு.க.

"வாய் வீங்கிப் போச்சு கூட்டத்துக்கு போகல" : தலைமைக்கு தமாஷ் பதில் கொடுக்கும் அழகிரி தி.மு.க.
"வாய் வீங்கிப் போச்சு கூட்டத்துக்கு போகல" : தலைமைக்கு தமாஷ் பதில் கொடுக்கும் அழகிரி தி.மு.க.
"வாய் வீங்கிப் போச்சு கூட்டத்துக்கு போகல" : தலைமைக்கு தமாஷ் பதில் கொடுக்கும் அழகிரி தி.மு.க.

மதுரை: ம‌துரை மாநகர் மாவட்ட தி.மு.க.வில் அழகிரி விசுவாசிகள் 15 பேருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது தி.மு.க. தலைமை.

மார்ச் 30 ஆம் தேதி மதுரையில் மு.க.ஸ்டாலின் மணிவிழா மற்றும் இளைஞர்களின் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தை நடத்தியது ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்றாலும் கூட, அழகிரி ஆதரவாளர்களின் பெயர்களும் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தன. ஆனால், கூட்டத்தை அழகிரி முகாம் கூண்டோடு புறக்கணித்தது.

இதனால் அப்செட் ஆன‌ ஸ்டாலின் ஆதரவாளர்கள், மறந்துகூட தங்களது உரைவீச்சில் அழகிரி பெயரை உச்சரிக்க வில்லை. முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்
மட்டுன்றி சிறப்பு பேச்சாளரான துரைமுருகனும் ஸ்டாலின் புகழை மட்டும் பாடிச்சென்றனர்.

இந்த நிலையில், இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த அழகிரி ஆதரவு தி.மு.க. நிர்வாகிகள் 15 பேருக்கு கழக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மாநகர தி.மு.க.வின் அவைத் தலைவர் இசக்கிமுத்து, துணை செயலாளர்கள் சிவகுமார், உதயகுமார், சின்னம்மாள், பொருளாளர் மிசா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. கௌஸ்பாட்சா மற்றும் 7 பகுதி செயலாளர்கள் உள்பட 15 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்று அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

##~~##
நோட்டீஸ் பெற்ற பாக்கியசாலிகளில் ஒருவரான‌ மிசா பாண்டியனிடம் இதுபற்றிக் கேட்டோம். "நான் 27 வருஷமா கட்சிப் பொறுப்புல இருக்கேன் தம்பி. இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் இப்பத் தான் நடக்குது. சின்னப் பையங்க பள்ளிக்கூடத்துல புகார் செய்வாங்க பாருங்க. 'டீச்சர் அவன் கிள்ளுறான் இவன் கிள்ளுறான்"னு அது மாதிரி ஆகிப் போச்சு தம்பி மதுரை தி.மு.க‌. கட்சி போராட்டம், தேர்தல் பணிக்கு வரலைன்னா புகார் பண்ண வேண்டியது தான். ஒரு பொதுக்கூட்டத்துக்கு வராததுக்குமாய்யா புகார் பண்றது?
எங்களை அவங்க அழைச்சது உண்மை தான். அவங்க அடிச்ச அழைப்பிதழ்ல 250 பேரு பெயர் இருக்கு. அத்தனை பேருமா வந்தாங்க? நாங்க மட்டும் வராததை ஏன் பெருசு படுத்துறாங்கன்னு தெரியலை. இதுபத்தி அழகிரி அண்ணனிடம் புகார் செஞ்சோம். 'அப்படியா மதுரையில கூட்டம் நடந்துச்சா?'ன்னு கேட்டாரு. தென் மண்டல அமைப்புச் செயலாளரான அவருக்கே தகவல் சொல்லாம கூட்டம் நடத்துறாங்க. இதுல நாங்க என்னத்தைச் சொல்றது?
இருந்தாலும், விளக்கம் கொடுக்க நான் தயாராகிட்டேன். எனக்கு வாயில அலர்ஜி இருக்கு தம்பி. அன்னைக்கு வாய் வீங்கிப் போய் இருந்துச்சி. வெளியே வந்தா அசிங்கமா இருக்குமேன்னு தான் கூட்டத்துக்கு வரலை" என்றார்.
தலைமை அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் கொடுக்க‌ அழகிரி விசுவாசிகள் அத்தனை பேரும் இப்படி தமாஷ் காரணங்களை தயாராய் வைத்திருக்கிறார்கள்.
கே.கே.மகேஷ்