Published:Updated:

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

Published:Updated:
எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

மிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்டு கோ கைப்பற்றிவிட்டது. அ.தி.மு.க என்ற கட்சியையும் கைப்பற்றிவிட்டதாக அவர்களே பொதுக்குழுவைக் கூட்டி அறிவித்துவிட்டனர்.  ஆனால், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரையும், அ.தி.மு.க-வின் அங்கீகரிக்கப்பட்ட தொலைக்காட்சியான ஜெயா டி.வி-யையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவை சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதை காலிசெய்வதற்காக எடப்பாடி  அணி போட்டுள்ள திட்டம்தான், புதிய  நாளிதழ் ஆரம்பிப்பதும், ‘அம்மா தொலைக்காட்சி’ என்ற டி.வி சேனல் தொடங்குவதும்.

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சியின் அதிகாரபூர்வ வார இதழாக ‘தாய்’  வெளிவந்தது. மேலும், ‘அண்ணா’ என்ற பெயரில் நாளேடு ஒன்றையும் எம்.ஜி.ஆர் நடத்திவந்தார். இரண்டிலும் நிறுவனர் என எம்.ஜி.ஆரின் பெயரே இருக்கும். எம்.ஜி.ஆர் இறந்து, ‘ஜா’, ‘ஜெ’ என அணிகள் பிரிந்தன. அப்போது தன் அணிக்காக, ‘நமது எம்.ஜி.ஆர்’ என்ற பத்திரிகையை 1988 ஜூலை 11-ம் தேதி ஜெயலலிதா தொடங்கினார். அதன் பங்குதாரர்களாக ஜெயலலிதா, சசிகலா, திவாகரன், தினகரன் ஆகியோர் இருந்தனர்.

1995-ல் ஜெ.ஜெ டி.வி தொடங்கப்பட்டது. அதன் சேர்மனாக சசிகலாவும், நிர்வாக இயக்குநராக சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் பாஸ்கரனும் இருந்தனர். அந்த ஜெ.ஜெ டி.வி-தான் 1999-ல் ஜெயா டி.வி-யாக மாறியது.  இது, அ.தி.மு.க-வின் செய்திகளையும், அந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கும்போது அரசின் செய்திகளையும் பிரதானமாக ஒளிபரப்பிவந்தது. ஆனாலும், அதன் உரிமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் சசிகலா குடும்பத்திடமே இருந்தது. இப்போது நமது எம்..ஜி.ஆரின் ஆசிரியர் பொறுப்பில் சசிகலாவின் உறவினர் சிவக்குமார் இருக்கிறார். இந்த யதார்த்தம் புரியாத எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, ‘ஜெயா தொலைக்காட்சியையும் நமது
எம்.ஜி.ஆர்  நாளேட்டையும் சட்டப்படி மீட்போம்’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

அந்தத் தீர்மானத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆரின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் (சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியின் மகன்),  “நமது எம்.ஜி.ஆரும் ஜெயா டி.வியும் தனியார் சொத்து; அதை மீட்போம் என எடப்பாடி பழனிச்சாமி எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும்? இது, ஊடகங்களுக்கு விடுக்கப்படுகிற அச்சுறுத்தல்” எனத்  தெரிவித்தார். இதையடுத்து, சொந்தமாக வேறோரு நாளேட்டையும், தொலைக்காட்சியையும் உருவாக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கினார்கள் எடப்பாடி அணியினர்.

புதிதாகப் பத்திரிகை ஆரம்பிப்பதைவிட ஏற்கெனவே அ.தி.மு.க சார்பு பத்திரிகையாக இருக்கும் ஒன்றை வாங்கிவிடலாம் எனப் பிறகு எடப்பாடி தரப்பு முடிவு செய்தது. அப்போதுதான், அ.தி.மு.க பேச்சாளரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயகோவிந்தன் என்பவர் ‘நமது அம்மா’ என்ற நாளேட்டை நடத்திக் கொண்டிருப்பது எடப்பாடியின் கவனத்துக்கு வந்தது. அதை தங்களுடைய அதிகாரபூர்வ நாளேடாக மாற்றிவிடலாமா என்று ஆலோசனை செய்தனர். கடந்த 20-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி புஷ்கரத்தில் நீராடிய போதே, ‘நமது அம்மா’ பத்திரிகைக்கும் பூஜை போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், தற்போது எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் எடப்பாடியிடம் “அந்தப் பத்திரிகையை வாங்கி நடத்துவதைவிட புதியதாக நாமே ஒரு பத்திரிகையை  ஆரம்பித்துவிடலாம்” என்றார். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லியிருக்கிறார். “நமது அம்மா பத்திரிகை தினசரி நாளிதழாக பதிவு செய்யப்படவில்லை. அதே போல், ஜெயகோவிந்தன், பன்னீர் செல்வத்துக்கு விசுவசமாக இருப்பவர்’’ எனச் சொல்லப்பட்டுள்ளது. இதனால், வேறு பத்திரிகையைத் தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆரை எதிர்க்கும் எம்.ஜி.ஆர்

புதிய பத்திரிகையின் பெயராக ‘டாக்டர் நம்ம எம்.ஜி.ஆர்’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சிக்கு ‘அம்மா டி.வி’ எனப் பெயர் வைக்க முடிவாகியுள்ளது. ஏற்கெனவே நமது எம்.ஜி.ஆரின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜிடம் புதிய பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை  ஏற்கும்படி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் உறுதியாக எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். ஆனால், பத்திரிகையின் பெயரைப் பதிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

எது எப்படியோ நமது எம்.ஜி.ஆரை எதிர்க்க இன்னொரு எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டார்!

- ஜெ.அன்பரசன்