Published:Updated:

“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”

“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”

புது ரூட்டில் அ.தி.மு.க கூட்டாளிகள்

“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”

புது ரூட்டில் அ.தி.மு.க கூட்டாளிகள்

Published:Updated:
“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”

முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமீமுன் அன்சாரி ஆகியோர்தான் இன்றைய அரசியலில் அசைக்க முடியாத கூட்டணி! அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தனி ட்ராக்கில் கூட்டாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மூவராலும் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சிக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”

‘பாசிஸத்தை வீழ்த்துவோம்; சமூக நீதியை வென்றெடுப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு கருணாஸ் மற்றும் தனியரசுவை அழைத்து வந்திருந்தார் தமீமுன் அன்சாரி. முதலில் மைக் பிடித்த கருணாஸ், “நான் தனியரசைப் போல சமூகத்துக்காகப் போராடி சிறைசென்றவன் இல்லை. அன்சாரியைப்போல் சிறுவயதிலேயே பொதுவாழ்வுக்கு வந்து, சமூக மக்களுக்காகப் போராடவில்லை. ‘நோகாமல் நுங்கு சாப்பிடுவது’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படித்தான் நானும். ஆனால், நான் ஒன்றை மட்டும் செய்தேன். பசும்பொன் ஐயாவை மனதார வணங்கினேன். அதற்காகக் கிடைத்ததுதான் இந்த வாய்ப்பு. என் சமூகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும், என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார் ஜெயலலிதா அம்மா. அந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் சின்னம்மா. நான் நன்றி மறவாதவன். அதனால்தான் நான், தினகரன் பக்கம் நிற்கிறேன். தினகரனே விலகினாலும் நான் சின்னம்மாவைவிட்டு விலகமாட்டேன்’’ என அதிரடியாக முடித்தார்.

அடுத்ததாகப் பேசிய தனியரசு, “மோடி அரசு மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்தபோது, நாங்கள் மூன்று பேரும் எதிர்ப்பைப் பதிவுசெய்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தோம். மோடியின் அரசு எல்லா வகையிலும் நம்மீது பாசிஸத்தை விதைக்கிறது. எந்த ஒரு பாசிஸத்தாலும் எந்த ஒரு பெரும்பான்மையி னராலும் இந்த தனியரசு இருக்கும் வரையில் இஸ்லாமியர்களின் முடியைக்கூட தொட முடியாது. 99 சதவிகித இந்துக்கள் சகோதரத்துவத்தையே விரும்புகிறார்கள். மதவெறியால் மற்ற சகோதர மதத்தவர்கள்மீது வெறுப்பை உமிழ்வதையும், வன்முறையை ஏவுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொன்றாக நம்மீது திணிக்கிறார்கள். இப்போது இந்தி கற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். இந்திக்காரர்கள் தமிழகத்தின் தெருக்களில், பஞ்சுமிட்டாய் விற்பதையும் பானிபூரி விற்பதையும் பார்த்த எவனாவது இந்தி கற்றுக் கொள்ள நினைப்பானா? இதெல்லாம் முட்டாள்தனமா இருக்கு. இங்க நல்லா படிச்சு சொத்துபத்தோட இருக்காங்க. ஆனால், தன் பிள்ளை பத்துப் பதினைஞ்சு மொழிகள் கத்துக்கிட்டு, ஃபாரின்ல ஐம்பதாயிரம் சம்பாதிச்சாதான் பெருமைனு நினைக்கிறாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அ.தி.மு.க இல்லையென்றால் தி.மு.க-தான் ஆளும்!”

வெளிநாட்டுக்காரன் எவனாவது தன் பிள்ளையிடம் ‘அம்மா’னு சொல்லச் சொல்லி அடிக்கிறானா? இங்க மட்டும்தான் ‘மம்மி சொல்லு... டாடி சொல்லு’னு அடிக்கிறோம். ‘அம்மா’ என்கிற வார்த்தையில எவ்வளவு அன்பு இருக்கு? இங்கிலீஷ்லயும், இந்தியிலயும் எங்க இருக்கு? ஜல்லிக்கட்டைப் போல ‘நீட்’ பிரச்னைக்கும் போராடியிருந்தால் அனிதாவுடைய உயிர் போயிருக்காது.  இப்போது, ‘யோகா கத்துக்கணும்’னு கிளம்புறாய்ங்க. இந்து மதத்தைப் பரப்புவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு யோகாவைத் திணிக்கிறது. யோகாங்கிறது நம்ம கலாச்சாரமே கிடையாது. யோகா திணிப்பு என்பது இந்து மதத்தைப் பரப்புவதற்கான கலாசாரப் படையெடுப்பு. உடல் ஆரோக்கியமாக இருக்கணும்னா கபடி விளையாடச் சொல்லு, சில்லு விளையாடச் சொல்லு. ஏன் யோகாதான் கத்துக்கணும்னு திணிக்கிற? மரங்களை வெட்டிவிட்டு நதிகளை மீட்க போராடும் ஜக்கி வாசுதேவ் மாதிரியான ஆட்கள்தான் இங்கே, யோகா சொல்லிக் கொடுக்கிறாங்க. நீட், யோகா, நவோதயா பள்ளி என எல்லாவற்றையும் எதிர்த்து நாம் வலுவாகப் போராட வேண்டிய நேரம் இது’’ என முடித்தார் தனியரசு.

இறுதியாக மைக் பிடித்த தமீமுன் அன்சாரி, “கழகங்கள் இல்லாத ஆட்சியைத் தமிழகத்தில் அமைப்போம் என்கிறது பி.ஜே.பி. அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்கே எங்களுக்குள் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எங்களுக்குள் சண்டைகள் நடக்கலாம். மனஸ்தாபங்கள் இருக்கலாம். ஆனால், தமிழகத்தை அ.தி.மு.க-தான் ஆளும். அ.தி.மு.க இல்லாவிட்டால் தி.மு.க-தான் ஆளும். இந்த இரண்டு கழகங்களைத்தவிர, வேறு யாருக்கும் இங்கு இடமில்லை. நாங்கள் மூன்றுபேரும் இணைந்திருப்பதே சமூகநீதிக்கான முன்னெடுப்புதான்.தொடர்ந்து எங்கள் ஒற்றுமைக் குரல் ஒலிக்கும்’’ என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: க.விக்னேஸ்வரன்