Published:Updated:

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

Published:Updated:
மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

“மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் அதிகாரத்தின் உரையாடலால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். அதிகாரம் சதா அவர்களை முறைமைப்படுத்திக்கொண்டே இருக்கிறது.”

- ஃபூக்கோ. 

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

செப்டம்பர்  6 காலையில், பெங்களூருவின் பண்பாட்டு மையமான ரவீந்திர கலாஷேத்திரத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். முந்தைய இரவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திட, விட்டுவிட்டுப் பெய்த மழையிலும் விடாது வந்துகொண்டிருந்தனர். எங்கும் ‘நானே கவுரி’ என்னும் பதாகைகள். அநீதியைத் தட்டிக்கேட்ட பத்திரிகையாளருக்கு, அதுவும் 55 வயதான பெண்ணுக்கு, துப்பாக்கிக் குண்டுகளால் சாவென்றால் ‘நாங்களும் கவுரிகளே... எங்களையும் பலி கொடுங்கள்’ என்னும் விதமாக முழக்கங்கள். அரசின் நோக்கம் பசுவைப் பாதுகாப்பதாக இருக்கும்போது மனித உயிர்கள் எம்மாத்திரம்? கவுரி ஒரு சோஷலிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்தவர். மருத்துவராகும் கனவைக் கலைத்துவிட்டுப் பத்திரிகையாளரானவர். பத்திரிகையாளரும் இலக்கியவாதியும் சோஷலிஸ்ட்டுமான பி.லங்கேஷின் மகள். ஒரு கட்டத்தில் தந்தை நடத்திய ‘லங்கேஷ் பத்திரிகா’-வை நடத்தினார். பின், ‘கவுரி லங்கேஷ் பத்திரிகா’வைத் தொடங்கி நடத்தினார். தலித்துகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுத்து வந்திருப்பவர். இந்துத்துவாக் குழுக்களை எதிர்ப்பவர். ஆளும் அமைப்பின் போலித்தனங்களை அம்பலப்படுத்துபவர். தீவிரமாகப் போராடும் மார்க்ஸிய லெனினியத் தோழர்களை மைய நீரோட்ட அரசியலுக்குக் கொண்டுவந்திடும் அக்கறை மிக்கவர். இத்தகையச் செயல்பாட்டாளரும் பத்திரிகையாளரும்தான் நள்ளிரவில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

2015-ல் பகுத்தறிவுவாதியும் அறிஞருமான கல்புர்கி இதே மாதிரியான தோட்டாக்களுக்குப் பலியானார். இத்தோட்டாக்கள் யாருடைய துப்பாக்கியிலிருந்து புறப்பட்டன அல்லது ஏவிவிட்டது யார் என்பது இன்னும் கர்நாடகக் காவல்துறைக்குப் புரிபடவில்லை. ‘நான் தேடிச்சென்றபோது கண்டேன். கண்டபோது நானில்லை’ என்னும் கபீர் சொல்லும் அனுபூதிக் குழப்பம் போலீஸாருக்கு வந்திருக்கக்கூடும்.

அதே ஆண்டு மகாராஷ்டிரம் கோலாப்பூரில் இப்படியான துப்பாக்கி ரவைகள்,எழுத்தாளரும் அரசியல் வாதியுமான கோவிந்த் பன்ஸராவை வீழ்த்தின. 2013-ல் மருத்துவரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கரைப் பதம் பார்த்தன. ஆக, பலியானவர்களெல்லாம் எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள். `இவர்களெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்குத் தேவை பசுவே’ என்கின்றன அசரீரிக் குரல்கள்.

தபோல்கரையும், பன்ஸராவையும், கல்புர்கியையும், கவுரியையும் பைக்கில் வந்த இருவர் குறிவைத்து உயிர்களைப் பறித்துள்ளனர். இருவரில் ஒருவர் வண்டியிலேயே இருக்க, இன்னொருவர் சுட்டுவிடுவார். இது அவர்களது வேலைநடைமுறை /வேலைப்பிரிவினை. தபோல்கரையும் பன்ஸராவையும் வீழ்த்தியவர்கள் ‘சந்தான் சன்ஸ்தா’ என்னும் இந்துத்துவா சார்புடைய அமைப்பினர் என்பது மராட்டியக் காவல்துறையின் விசாரணையில் வெளிப்படுகிறது. கர்நாடகத்திலும் இதைச் செய்திருக்கக்கூடியவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். ‘இப்போது பிரச்னை, யார் கொன்றது என்பதில் இல்லை. எதற்குக் கொன்றார்கள் என்பதே’ என்கிறார் யோகேந்திர யாதவ்.

‘கவுரி, கருத்துகளின் எண்ணங்களின் வாழ்வை வாழ்ந்திருப்பவர், விடுதலைப் போராட்ட விழுமியங்களை மதித்து வந்திருப்பவர், அறிவார்ந்த மரபுகளை உயர்த்திப் பிடித்திருப்பவர், இந்தியாவின் பல மதங்கள், பல இனங்கள், பல மொழிகள் இணைந்த பன்மைத்துவத்தைப் போற்றுபவர். இத்தகைய ஆளுமை, இந்தியாவை விட்டுவிட்டு இந்துத்துவாவை மட்டும் முன்னிறுத்தும் சித்தாந்திகளுக்கு சிம்மசொப்பனம். ஒரு பத்திரிகையாளருக்கு அஞ்சி நடுங்கும் இந்தப் போலிச் சித்தாந்தவாதிகளுக்குப் பகுத்தறிவாளர்களும், பேராசிரியர்களும், சீர்திருத்த வாதிகளும், மாணவர் தலைவர்களும் சகித்துக்கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

டெல்லிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியப் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, இளம்பிள்ளைவாதத்தால் பாதிப்பிற்கு உள்ளாகி சக்கர நாற்காலியிலேயே இயங்குபவர். இப்போது இவர், தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் நாசிக் சிறையில் இருக்கிறார். இருதயப் பிரச்னைகள் ஒரு பக்கம் அழுத்த, சக்கர நாற்காலியிலிருந்து வெளியேற முடியாத ஒருவர், அரசுக்குப் பயங்கரவாதியாக இருக்கிறார்.  ஆந்திராவின் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்து, சுத்திகரிப்புத் தொழிலாளிகளால் வளர்க்கப்பட்டு, இலக்கியம் படிப்பித்து வந்தவர் அரசுக்குப் பீதியூட்டுபவராக இருக்கிறார்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், மனித உரிமைகள் பற்றிப் பேசியதால் தேசவிரோதக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். சில பல தசாப்தங்களுக்கு முன், டெல்லியில் நாடகங்கள் மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்திவந்த சஃப்தர் ஹாஸ்மி பலியானார். ஆக, மாணவர்களும், கலைஞர்களும், பேராசிரியர்களும், பகுத்தறிவாளர்களும், பத்திரிகையாளர்களும் எதிரிகளாகிவிடும் ஒரு சூழலில், இந்த அரசு யாரைக் கொண்டாடுகிறது, யாரைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது?

திரைப்படங்கள் எடுத்துச் சம்பாதித்து, கவர்ச்சிகரமான ஆளுமையாகி, ஆசிரமங்களும் நடத்திவரும் குர்மீத் ராம் ரஹீம்சிங் போன்ற போலிகள் அரசுக்குத் தேவை. ஆனால், இந்த நபரின் லீலைகளை 2002-ல் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ராம்சந்திர சத்திரபதி? படுகொலை செய்யப்பட்டார்.

ஆக, குற்றமிழைக்கும் பாபாக்கள்தான் எங்களுக்கு வேண்டுமே அல்லாமல், அதை அம்பலப்படுத்திவிடும் பத்திரிகையாளர்கள் அல்ல. இதுதான் அரசின் நிலைப்பாடா?

ஹெச்.ஜி.ரசூல் நெகிழ்ச்சி தரும் நுண் கதை ஒன்றை எழுதிவிட்டுச் சென்றுள்ளார். 

மனிதர்கள் சுதந்திரமானவர்கள் அல்லவோ? - சா.தேவதாஸ்நினைத்ததை வரைந்துவிடும் திறமை ஒரு சிறுவனுக்கு. பென்சிலும் தாளும் வாங்கக்கூட காசில்லை. அரிய பென்சில் ஒன்றை அவனிடம் அளிக்கும் பெரியவர் ஒருவர், `நீ வரைவது உயிர் பெற்றுவிடும், எளியவருக்கு மட்டும் இதைப் பயன்படுத்து’ என்று கூறிச் செல்கிறார். கோழி வரைந்ததும் அது உயிர் பெற்றுக் கொக்கரிக்கிறது. பந்து வரைந்தால், உருண்டோடுகிறது. பூனை வரைந்தால் மியாவ் என்கிறது... இந்நிலையில் மன்னன் அவனை அழைத்துவரச் சொல்லித் தங்கக் காசுகள் கொழிக்கும் மரத்தை வரையுமாறு கட்டாயப்படுத்துகிறான். இணங்காத சிறுவனைச் சிறைவைக்கிறான். மாய ஆற்றலால் தப்பிவிடும் சிறுவன், கடற்கரை மணலில் அமர்ந்துள்ளான்.

அழுதுகொண்டுவரும் சிறுமி ஒருத்தி ஒரு படத்தை நீட்டி‘இவரைக் கொன்று விட்டார்கள். இவர் எனது அப்பா. அப்பாவை ஓவியமாக்கித் தா’ என்கிறாள். அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட பாரூக்கின் மகள் அவள். “புதிதாய் வந்த கூட்டத்தில் கல்புர்கியின் மனைவியும் பன்ஸராவின் மகளும் கொல்லப்பட்ட தன் கணவனின், தந்தையின் படங்களோடு வரிசையில் காத்து நின்றனர்” என்று முடிகிறது நுண்கதை. ஆனால், கதையை வாசிக்கும் வாசகன் இப்படி முடிக்க எண்ணுகிறான் - ‘இந்திராவும், கவிதாவும், இந்திரஜித்தும் தன் மகள் / தன் சகோதரியின் படத்தைத் தீட்டுமாறு வரிசையில் காத்து நின்றனர்.’    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism