Published:Updated:

சோனியா- மன்மோகன் கூட்டு தோல்வி: திக் விஜய் சிங் கருத்தால் சர்ச்சை

சோனியா- மன்மோகன் கூட்டு தோல்வி: திக் விஜய் சிங் கருத்தால் சர்ச்சை
சோனியா- மன்மோகன் கூட்டு தோல்வி: திக் விஜய் சிங் கருத்தால் சர்ச்சை
சோனியா- மன்மோகன் கூட்டு தோல்வி: திக் விஜய் சிங் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: "சோனியா - மன்மோகன் சிங் கூட்டு தோல்வி அடைந்துவிட்டது" என்று  காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் மீண்டும் கூறியிருப்பது அக்கட்சியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியில் நடந்து வரும் இரட்டை அதிகார மையம் நாட்டுக்கு சரியில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர் கருத்தாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி, சோனியா மற்றும் மன்மோகன் இரட்டை அதிகார மைய பார்முலா மிகவும் சிறந்த முறையில் பயனளித்து வருவதாகவும், இந்த பார்முலா வருங்காலத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

##~~##
இந்த நிலையில், இரட்டை அதிகார மையம் குறித்து 'நான் சொன்னது சொன்னதுதான், சோனியா - மன்மோகன் சிங் கூட்டு தோல்வி அடைந்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் தொண்டன் என்கிற முறையில் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவேன்" என்று  விஜய் சிங் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.