Published:Updated:

டெசோ போராட்டம் தோல்வி: தி.மு.க வெளிநடப்பு

டெசோ போராட்டம் தோல்வி: தி.மு.க வெளிநடப்பு
டெசோ போராட்டம் தோல்வி: தி.மு.க வெளிநடப்பு

சென்னை: டெசோ போராட்டம்  குறித்து அமைச்சர் கூறிய கருத்தை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் வளர்மதி, இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க டெல்லியில் நடத்திய டெசோ கூட்டம் தோல்வியடைந்தது என்றார்.

##~~##
இதற்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமைச்சர் கூறிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் சபாநாயகர் தனபால், அமைச்சரின் கருத்தை நீக்க அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் தி.மு.க உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.