Published:Updated:

மோடி அரசின் ஊழலால் ரூ. 17,000 கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு!

மோடி அரசின் ஊழலால் ரூ. 17,000 கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு!
மோடி அரசின் ஊழலால் ரூ. 17,000 கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு!
மோடி அரசின் ஊழலால் ரூ. 17,000 கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு!

புதுடெல்லி:   நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் ஒழுங்கின்மையால் குஜராத் அரசாங்க கஜானாவுக்கு சுமார் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ( சிஏஜி) குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட  2009 - 11 ஆம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை குஜராத் சட்டசபையில்  தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் மேற்கூறிய குற்றச்சாட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்ததில், குஜராத் அரசு அளவுக்கு மீறிய சலுகைகளை வழங்கி உள்ளது. குறிப்பாக எல் அண்ட் டி, போர்டு இந்தியா, எஸ்ஸார் ஸ்டீல்ஸ் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அரசு நிலங்கள் ஒதுக்கப்பட்டு சலுகைகள் காட்டப்பட்டதாகவும்,  அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில நிதி அமைச்சர் நிதின் படேல் கூறுகையில், "இது மோசடி அல்ல. சில விசயங்களில் ஒழுங்கின்மை உள்ளது. இந்த அறிக்கையை சட்டசபையின் பொது கணக்கு குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர் முடிவெடுக்கப்படும். அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா கூறுகையில்," டெல்லியில், கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையைக் காரணம் காட்டி, பாரதீய ஜனதா நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் தடுத்தது. இங்கு குஜராத்தில் பா. ஜனதா அரசின் மோசடியைக் கூறும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மோடிக்கு பின்னடைவு

 
குஜராத் மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளதாக கூறி மோடியின் நிர்வாகத்திறன் குறித்து இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்ட அதே சமயம் , குஜராத் மாநிலத்தில் புதிய தொழில்களை தொடங்கவும், பழைய நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்டவும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிகளை மீறி அவற்றின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்ததாக மோடி மீது ஏற்கனவே குற்றச்சாட்டு கூறப்பட்டதுண்டு.
##~~##
இது ஒருபுறமிருக்க, அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியை முன் நிறுத்த பா.ஜனதா தயாராகி வரும் நிலையில், சிஏஜி-யின் மேற்கூறிய அறிக்கை அக்கட்சிக்கு மட்டுமல்லாது மட்டுமல்லாது, மோடிக்குமே பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.