Published:Updated:

மோடியின் பிரெய்ன் டீம்!

மோடியின் பிரெய்ன் டீம்!
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் பிரெய்ன் டீம்!

பரிசல் கிருஷ்ணா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

மோடியின் பிரெய்ன் டீம்!

பரிசல் கிருஷ்ணா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
மோடியின் பிரெய்ன் டீம்!
பிரீமியம் ஸ்டோரி
மோடியின் பிரெய்ன் டீம்!
மோடியின் பிரெய்ன் டீம்!

பிரதமர் மோடியை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவருடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், சின்னச்சின்ன முடிவுகளின் பின்னணியிலும் பல மனிதர்களின் மூளையும் ஆற்றலும் இருக்கின்றன. மோடி ஒரு திட்டத்தையோ செயலையோ முன்னெடுக்க நினைத்தால், செயல்படுத்த முனைந்தால் அதன் சாதக பாதகங்களை அலச... அதைத் திறம்படச் செய்து முடிக்க அவருக்குப் பின்னே இருக்கும் ‘பிரெய்ன் டீம்’ கொஞ்சம் பெரிசு!  அப்படி மோடியின் உற்ற துணையாக இருக்கிற முக்கியமான 9 பேர் இவர்கள்!

மோடியின் பிரெய்ன் டீம்!

அமித் ஷா      

மோடியின் வலது கரம். மோடியுடன் முப்பதாண்டுகளாக `கரம்’ கோத்துக்கொண்டிருப்பவர், இன்றைய பா.ஜ.க தலைவர் அமித் ஷா. 1990-களில் குஜராத்தின் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கைத் திட்டமிட்டுக் கரைத்த இருவராக மோடியும், அமித் ஷாவும் இருந்தனர். அடிப்படையிலேயே பிஸினஸ் குடும்பம் என்பதால், திட்டம் வகுப்பதில் அமித் ஷா எப்போதும் சிறப்பாகச் செயல்படுபவர். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அமித் ஷாதான் மந்திரி சபையின் இளைய உறுப்பினர். கிட்டத்தட்ட 10 துறைகளுக்கு மேல் கையாண்டார். இவரது நிர்வாகத் திறமை பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமன்றி, பிற கட்சிகளிடையேயும் பிரசித்தம். பா.ஜ.க கோலோச்சிக்கொண்டிருக்கும் மாநிலங்களில், இன்னும் அதைப் பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசு இல்லாத மாநிலங்களில் காலூன்றவுமென மோடியின் பிளான்களை பக்காவாக செயல்படுத்தும் தளபதி அமித் ஷா!

மோடியின் பிரெய்ன் டீம்!

அனில் ஜெய்ன்

மோடியின் பயணங்களைத் திட்டமிடும் ப்ளானர் அனில் ஜெய்ன். மத்தியப் பிரதேச மாநிலத்தின், நிவாரித் தொகுதி எம்.எல்.ஏவான இவர் கட்சியின் தேசியச் செயலாளரும்கூட. தேர்தல் சமயங்களில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, பூத் ஏஜண்டுகளைத் தேர்வு செய்வது போன்ற முக்கிய முடிவுகளின்போது இவரின் கருத்துகளைக் கேட்டுத்தான் மோடி முடிவெடுப்பார்.

மோடியின் பிரெய்ன் டீம்!

ஓம் ப்ரகாஷ் மாத்தூர்

கட்சியின் துணைத்தலைவர். அமித் ஷாவுடன், இவர் பெயரும் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபட்டது. ‘ஓம் பாய்சாப்’ என்று கட்சியினரிடையே மரியாதையுடன் அழைக்கப்படும் இவர் 1970-களில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அபிமானி. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில், தேர்தல் பணிகளின்போது அமித் ஷாவுடன் இணைந்து இவர் வகுத்த வியூகம் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது.  தன் அனுபவங்களைக் கட்சி இளைஞர்களிடம் பகிர்ந்துகொண்டு வேலை வாங்குவதில் கில்லாடி என்பதால், மோடியின் ஆல் டைம் ஃபேவரிட் லிஸ்டில் இவர் எப்போதும் உண்டு. 

மோடியின் பிரெய்ன் டீம்!

பூபேந்தர் யாதவ்

கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர். பல்மொழி வித்தகர் என்பதால் கட்சியில் இவருக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. ராஜஸ்தான் தேர்தல் பணிகளின் முக்கியப்பொறுப்பு இவரிடம்தான். ராஜஸ்தான் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மற்ற மாநிலத் தேர்தல் பணிகளில் அமித் ஷாவுக்கு வலது கரமாகத் திகழ்ந்தார். மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்களிடமிருந்தே யோசனைகளாகப் பெற்று அவற்றைக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளைத் தயாரித்து கட்சிக்குச் செல்வாக்கு தேடித் தந்ததில் பூபேந்தர் யாதவின் பங்கு முக்கியமானது. தேர்தல் சமயங்களில் பொதுக்கூட்டங்களை முடிவு செய்வதும், அவற்றை வழிநடத்துவதும் பூபேந்தர் ஸ்பெஷாலிட்டி.

மோடியின் பிரெய்ன் டீம்!

அரவிந்த் குப்தா

டெக்கி. பா.ஜ.கவின் ஐ.டி விங்கின் முக்கியஸ்தர் அரவிந்த் குப்தா. 2014 தேர்தலின்போது இவரின் டிஜிட்டல் மய ஐடியாக்களே இளைஞர்களிடம் கட்சியை வெகுவாகக் கொண்டுசேர்த்தது. அப்போதே மோடியின் பார்வையில் பட்ட இவர், பிறகு ஒவ்வொரு மாநிலத் தேர்தலின்போதும் மோடி & டீம் வியூகம் வகுக்கச் சேர்த்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராகிவிட்டார். மாவட்ட, மாநில, தேசிய வாரியாக பாரதிய ஜனதா கட்சியை டிஜிட்டல் பி.ஜே.பியாக மாற்றும் பலே பலே திட்டங்களெல்லாம் இவர் வைத்திருக்கிறார். அது நடந்தால், கிராமங்களிலிருந்து தலைநகரம் வரை கட்சிப்பணிகள் அனைத்தையும் அமித் ஷாவோ, மோடியோ விரல் நுனியில் நொடிக்கு நொடி அறிந்துகொள்ளலாம்.

மோடியின் பிரெய்ன் டீம்!

ஜகத் ப்ரகாஷ் நட்டா

மாணவப் பருவம் தொட்டே ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா என்று பா.ஜ.கவின் அனைத்து அங்கங்களிலும் பங்கு கொண்டவர் ஜே.பி.நட்டா. தற்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலன் அமைச்சர். மேலாண்மைப் பண்பில் இவர் கில்லி என்பதால், முக்கியமான முடிவுகளைத் திட்டமிடும்போதும், அவற்றைச் செயல்படுத்தும் முன்பும் இவர் இல்லாமல் எதுவும் நடக்காது.

மோடியின் பிரெய்ன் டீம்!

ராம் மாதவ்

ஆர்.எஸ்.எஸ்ஸில் முக்கியப் பங்காற்றியவர். அதன்  முன்னாள் தேசிய நிர்வாகி ராம் மாதவ். அப்போதிருந்தே கட்சியினரிடையே செல்வாக்கு பெற்றவர்.  பத்திரிகைத் துறையில் 20 வருடம் அனுபவம் உள்ளவர். தற்போதைய பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர். ஆந்திராவில் கட்சிப் பத்திரிகைகள் மூலம் பா.ஜ.கவின் செல்வாக்கை வளர்த்ததில் ராம் மாதவ், மோடி மற்றும் அமித் ஷாவின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். ராகுலின் செய்திகளுக்குப் பதிலடி கொடுக்க பா.ஜ.க செலுத்தும் அஸ்திரம், பெரும்பாலும் ராம் மாதவின் பேட்டிகள்தான்.

மோடியின் பிரெய்ன் டீம்!

ஹஸ்முக் ஆதியா

குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரி.  இப்போது மத்திய அரசின்  வருவாய்ச் செயலாளர். யோகாவில் டாக்டரேட் முடித்தவர் ஹஸ்முக். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ஹஸ்முக்குக்கு ஆன்மிகம், யோகாவில் இருந்த நாட்டம் மோடியை ஈர்த்தது. மோடி, டெல்லிக்கு மாறியதும், தன்னுடனேயே இருக்க வேண்டியவர்களின் லிஸ்ட்டில் தவறாது இடம் பிடித்தார் ஹஸ்முக். ஜி.எஸ்.டியைச் செயல்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் மோடிக்குப் பின்னால் இருந்த மிகப்பெரிய பலம் இவர்தான்.

மோடியின் பிரெய்ன் டீம்!

பியூஷ் கோயல்

பாரம்பரிய பா.ஜ.க குடும்பம். இன்றைய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர். கடந்த தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க வேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். அந்தத் தேர்தலின்போது சமூக ஊடகங்களில், கட்சியின் தேர்தல் பணிகளைக் கொண்டு சேர்த்ததில்  பியூஷ் முக்கியப் பங்காற்றினார். பியூஷின் ஆலோசனைகள் எப்போதுமே பிரதமர் மோடிக்கு முக்கியம். எந்த ஊரில் இருந்தாலும் `பியூஷ் என்ன சொல்கிறார்?’ என்று கேட்டபின்பே முடிவுகளை எடுப்பாராம் மோடி!