Published:Updated:

இந்தியா முன்னேறுகிறது: ராகுல் காந்தி

இந்தியா முன்னேறுகிறது:  ராகுல் காந்தி
இந்தியா முன்னேறுகிறது: ராகுல் காந்தி
இந்தியா முன்னேறுகிறது:  ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியா முன்னேறிக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

இந்தியர்களின் உறுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள ராகுல், இந்தியர்கள் தைரியத்துடனும், உறுதியான எண்ணத்துடனும் செயல்படுகின்றனர் என்றார்.

நமது பல்கலைக்கழகங்கள் தொழில்துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது  என்றும் கூறினார்.

##~~##
இளைஞர்களிடம் காணப்படும் சக்தியை இந்தியாவின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ராகுல், அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார்.
கர்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவைப் பற்றிய எண்ணங்கள் மாறியுள்ள என்றும் அனைத்து மக்களுக்கும் கல்வி, கட்டமைப்பு வசதிகள் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு ஒரு பிரச்னையே அல்ல

வேலைவாய்ப்பு ஒரு பிரச்னையே அல்ல என்றும், வேலைவாய்ப்பை அதிகரிக்க கல்வி முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும்  கூறிய ராகுல், இந்தியா எழுச்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அனைவருடைய முன்னேற்றமும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்  என்றும் அவர் கூறினார்.

நாட்டின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் ஒரே பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இந்திய நிறுவனங்கள் வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் மதிப்பை உயர்த்துவதில் இந்திய நிறுவனங்களின் பங்கு சிறப்பாக உள்ளது  என்று கூறிய ராகுல், போதிய பயிற்சி, திறமை இல்லாததால் வேலையில்லை என்ற நிலை இருப்பதாக தெரிவி்த்தார்.

நம்முடைய அறிவுசார் மூலதனத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்றும் அறிவுசார் மூலதனத்தை புரிந்து வளர்ச்சிக்கு பயன்படுத்த பாடுபட வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார்.

கூட்டு முயற்சி இல்லாமல் தொழில்துறையில் இந்தியா முன்னேற முடியாது  என்று தெரிவித்த ராகுல், அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்றார்.

பின்தங்கிய, ஏழை- பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.