Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

இப்போதைய நிலைமை சசிகலாவை என்ன நினைக்கத் தூண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யதார்த்தமாக அவர் யோசித்தால், ‘நினைப்பு பொழப்பைக் கெடுத்துவிட்டதே’ என்று நினைப்பார். சாதாரணமாக இருந்து சிறைக்குப் போயிருந்தால் இவ்வளவு அவமானப்பட்டிருக்க வேண்டியதில்லை. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகி, முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருந்த நிலைமையில் சிறைக்குள் போனது அவரது மனதை நிச்சயம் பாதித்திருக்கும். ஆனால் ஒன்று... இனிமேல் என்ன நினைத்து, என்ன திருந்தி, என்ன ஆகப்போகிறது?

கழுகார் பதில்கள்!

உமரி. பொ.கணேசன், மும்பை - 37.

? தற்போதைய அரசியலில், கூடாநட்பு கேடாய் முடியும் என்பது யாருக்குப் பொருந்தும்?

! பதவி ஒன்றை மட்டுமே நோக்கமாகக்கொண்டு எதையும் செய்யக் காத்திருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்.

காந்தி தியாகராஜன், சின்னசொக்கிகுளம்.

ஆம் ஆத்மி கட்சியில் கமல்ஹாசன் சேர்ந்துவிடுவாரா?

ஆம் ஆத்மியில் அவரைச் சேரச் சொல்வதற்காகத்தான் அர்விந்த் கெஜ்ரிவால் வந்தார். சேருவதற்கு கமல் சம்மதித்துவிட்டார் என்று சொல்லியே அவரை வரவைத்ததாகவும் சொல்கிறார்கள். தனது நோக்கத்தை கெஜ்ரிவால் சொன்னதுமே கமல் மறுத்துவிட்டார். ‘நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால், எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன். புதிய கட்சியைத்தான் தொடங்குவேன்’ என்று கமல் சொன்னது கெஜ்ரிவாலுக்கு ஏமாற்றமாகிவிட்டது. ‘ஊழலுக்கு எதிரான கட்சி இது’ என்று அவர் சொல்லவும், ‘ஊழலை எதிர்ப்பவர்கள் அனைவரும் என் நண்பர்கள்தான்’ என்று கமல் சொன்னார். இத்தோடு பேச்சுவார்த்தையே முடிந்தது, முறிந்தது.

கழுகார் பதில்கள்!

‘பள்ளத்தெரு’ சண்முகம், கொங்கணாபுரம்.

திருமுருகன் காந்தி விடுதலை குறித்து?

இதோ, அவர் விடுதலை செய்யப்பட்டதும்... மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டாரே? ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவரைத் தொடர்ந்து கைதுசெய்துகொண்டேதான் இருப்பார்கள்.

கழுகார் பதில்கள்!

திருப்பூர் அர்ஜூனன்.ஜி அவிநாசி.

கமல்ஹாசனை முட்டாள், பூஜ்யம் என்று சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளாரே?

மற்றவர்களை அவர் சொல்வதும், மற்றவர்கள் அவரைச் சொல்வதும் சகஜம்தான்.

பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை.

‘தினகரனை ஏற்றுக்கொள்ள முடியாது, சசிகலாவை ஒதுக்கமுடியாது’ என்கிறாரே அமைச்சர் ஓ.எஸ்.மணியன்?

இதுதான் ஸ்லீப்பர் செல்களின் குரல். பூனைக்குட்டிகள் முதலில் சசிகலாவை ஆதரிப்பது மாதிரி வெளியில் வரும். அப்புறம் தினகரனை ஆதரிக்கும்.

சோ.பூவேந்தரசு, சின்னதாராபுரம்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்போது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா?

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவார் என்று நம்புபவர்களில் ஒருவர் கூடியிருக்கிறார் என்பதைத்தவிர எதுவும் சொல்வதற்கில்லை.

கழுகார் பதில்கள்!

ச.புகழேந்தி, மதுரை - 14.

‘எங்களது தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்கிறது மத்திய அரசு’ என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு பற்றி?

மத்திய உளவுத்துறையாக இருந்தாலும் சரி, மாநில உளவுத்துறையாக இருந்தாலும் சரி, அரசுக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பதும் ஒட்டுக்கேட்பதும் அவர்களது பழக்க வழக்கங்களில் ஒன்றுதான். தனது தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது என்று சொல்லும் சித்தராமையாவின் அரசும், மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரது தொலைபேசியை ஒட்டுக்கேட்கத்தான் செய்யும். யார் ஒட்டுக்கேட்டாலும் தவறுதான். தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது, ஒரு விதத்தில் அத்துமீறல்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி - 10.

எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்களை இந்த ஆட்சியாளர்கள் மதிக்கிறார்களா?

லட்சக்கணக்கான பணம் செலவுசெய்து நடத்தப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்கூட எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுவதில்லை. இதில் எங்கே தொண்டர்களை நினைக்க நேரம் உள்ளது! எடப்பாடிக்கும் பன்னீருக்கும் தங்களை நினைக்கவே நேரமில்லை.

கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

எடப்பாடி, தினகரன் ஆகிய இருவரின் கூட்டங்களுக்கும் மக்கள்கூட்டம் அலைபாய்கிறதே. தானாக வருகிறதா... அழைத்து வரப்படுகிறதா?

அவர்களின் முகங்களைப் பார்த்தாலே அழைத்து வரப்படும் கூட்டம் என்று தெரிகிறதே. அதுவும் எடப்பாடி நடத்தும் கூட்டங்களுக்குப் பள்ளிப் பிள்ளைகளை மொத்தமொத்தமாக அழைத்துவந்து குவிக்கிறார்கள். நல்லவேளை, நீதிமன்றம் அதற்குத் தடை போட்டுவிட்டது.

பொதுமக்களைத்தான் பணம் கொடுத்து அழைத்துவருகிறார்கள் என்றால், பள்ளிக் குழந்தைகளுமா இதற்குப் பலியாக வேண்டும், பாவம். இவர்களை அழைத்து வருவது அனைத்தும் கல்லூரிப் பேருந்துகள். அவைக் கட்டாயப்படுத்தி அந்த நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலமாக, தன்னை ஜெயலலிதாபோலக் காட்டிக்கொள்ள எடப்பாடி முயற்சி செய்கிறார்.

வி.ஐ.பி கேள்வி

சி.ஆர்.சரஸ்வதி
அ.தி.மு.க அம்மா அணி (தினகரன் ஆதரவாளர்)

கழுகார் பதில்கள்!

புரட்சித்தலைவி அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் எனச் சொல்லிக்கொண்டு அதற்கு எதிரான வழியில் ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி பற்றி பொதுமக்களின் கருத்து என்ன?

எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ முதலமைச்சராவதற்கு பொதுமக்கள் வாக்களிக்கவில்லை. இன்னும் சொன்னால் சசிகலாவோ, தினகரனோ, முதலமைச்சராவதற்கும் பொதுமக்கள் வாக்களிக்கவில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க தொண்டர்களும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் இவர்கள் நான்கு பேரின் தலைமையை ஏற்றுக்கொண்டு வாக்களிக்கவில்லை. விழுந்த வாக்குகள் அனைத்தும் ஜெயலலிதாவை ஆட்சியில் உட்காரவைப்பதற்காக. அவரை முதலமைச்சராக்க நினைத்தே வாக்குகள் விழுந்தன. அந்த இடத்தைப் பறிப்பதற்குத்தான் அ.தி.மு.க-வில் இப்போது போட்டியே நடக்கிறது. இவர்கள் தங்களது சொந்த செல்வாக்கில் வென்று ஆட்சியை அமைத்தால் ஆட்சேபனை இல்லை. இரவல் ஆட்சியைப் பறித்துக்கொண்டு எடப்பாடி செயல்படுகிறார். புரட்சித்தலைவி அம்மா வழியில் நடப்பதாக அவர் சொல்லிக் கொள்ளலாம். அவரது நிழலைக்கூட இவரால் தொடமுடியாது. எனவே, பெரும்பான்மை அ.தி.மு.க தொண்டர்களாலும், இரட்டை இலைக்கு வாக்களித்தவர்களாலும்கூட ஏற்றுக் கொள்ள முடியாத மனிதராகத்தான் எடப்பாடி இருக்கிறார். இந்தப் பதவியில் அவர் இருக்கும்வரை உண்மையான நிலையை உணர முடியாது. பதவியை இழந்த மறுநாளே உண்மையான செல்வாக்கு என்ன என்பதை அவர் உணர்ந்துவிடுவார்.

படங்கள்: கே.ஜெரோம், பாலவெங்கடேஷ்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!