எடப்பாடி விழாவாக நடந்து முடிந்திருக்கிறது சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா. ‘மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது’ என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள்.

சேலம் கருப்பூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 30-ம் தேதி நடந்த விழாவுக்கு முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சேலத்தின் நிழல் முதல்வரும் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளருமான இளங்கோவன் முன்நின்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை டீசல் போட்டு அனுப்பிவைப்பதிலிருந்து உயர் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது வரையில் அனைத்துப் பணிகளையும் இளங்கோவன் கவனித்தார்.

சாலைகளை மறித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆரின் படங்களைவிட எடப்பாடியின் படங்கள்தான் அதிகம் காணப்பட்டன. ஆட்களை அழைத்து வருவதற்காக அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த விழாவால், சேலம் மாநகரமே போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ்கூடச் செல்ல முடியாமல் திணறியது.

சுய உதவிக்குழுக்கள், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோர் எனப் பலரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தனர். அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு டி-ஷர்ட், மாணவிகளுக்குச் சேலை கொடுத்து அழைத்து வந்திருந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் ஆசிரியர்களுடன் பள்ளி மாணவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

முதலில் பேசிய தம்பிதுரை, ‘‘பொதுமக்கள் காத்துக்கிடந்தும் மேட்டூர் அணைக்கு வராத தண்ணீர், எடப்பாடி முதல்வரானதும் வந்தது. இப்போது 90 அடியாக உள்ள நீர், ஓரிரு வாரங்களில் 100 அடிக்குமேல் உயர்ந்துவிடும். அதைப்போல எடப்பாடியும் அரசியலில் உயர்வார்’’ எனப் பேசி, மேடையில் இருந்த பன்னீர்செல்வத்தைக் கடுப்பேற்றினார்.

பன்னீர்செல்வம் பேசியபோது, ‘‘அம்மாவால் ஆட்சியைச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறோம். சிலர், இதைக் கலைக்க முயற்சி செய்தும் முடியாததால் பித்துப் பிடித்து அலைகிறார்கள்’’ என்றார்.

முதல்வர் பழனிசாமி, ‘‘மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை விமர்சிக்கிறார்கள். மத்திய அரசு என்ன அந்நிய அரசா? சேலம் அம்மாவின் கோட்டை. எவனாலும் நுழைய முடியாது. எவனாலும் அசைக்க முடியாது’’ என்றார்.

‘‘சேலம் பழனிசாமியின் கோட்டை எவனாலும் அசைக்க முடியாது’’ என்பதுதான் எம்.ஜி.ஆர் விழா மூலம் எடப்பாடி சொன்ன செய்தி!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்