Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

பொன்விழி, அன்னூர்.

கருணாநிதி உடல்நலம் எப்படி உள்ளது?


பார்க்கிறார். சிரிக்கிறார். ஆட்களைக் கவனிக்கிறார். ஒரு புதுமணத் தம்பதி அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தபோது... கையைத் தூக்கி, ‘வாழ்க... வாழ்க’ என்று சொல்லியிருக்கிறார். அதில், ‘க’ என்ற எழுத்து தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டதாம். ‘லேசாகப் பேச முயற்சி செய்தால் இருமல் வந்துவிடுகிறது’ என்று சொல்கிறார்கள்.

திருப்பூர் அர்ஜூனன்.ஜி, அவிநாசி.

தமிழக மக்கள் செய்த பாவம்தான் என்ன?


தங்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டை சிலர் விலைபேசியதால் ஏற்பட்ட வினையை எல்லோரும் அனுபவிக்கிறார்கள். ‘கையில் தரப்பட்டுள்ளது வாக்குச்சீட்டு அல்ல, வாழ்க்கைச் சீட்டு’ என்று மக்கள் நினைத்தால் மட்டும்தான் நிம்மதியான எதிர்காலம் அமையும்.

சோ.பூவேந்தரசு, சின்னதாராபுரம்.

‘ஆட்டுக்குத் தாடியும் மாநிலத்துக்கு கவர்னரும் தேவைதானா’ என்பதை வித்யாசாகர் ராவ் தனது செயல்பாடுகளால் உணர்த்திவிட்டார்தானே?


ஆமாம்! அவரால், தமிழக அரசியலில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரே பாடம் இதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘குஷ்புவை நம்பியோ, கமலை நம்பியோ, ரஜினியை நம்பியோ காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் தனது கொள்கையை நம்பித்தான் இருக்கிறது’ என்று குஷ்பு சொல்லியிருக்கிறாரே?

சபாஷ், சரியான போட்டி! இப்படியெல்லாம் சொல்லும் தைரியம் குஷ்புவுக்கு உண்டு. ‘அண்ணாமலை’, ‘சிங்காரவேலன்’ படங்கள் இப்போது ஹிட் ஆகுமா?

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய தினகரனே ஆட்சியை எப்படிக் கலைப்பார்?’ என்று கேட்கிறாரே நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை?

தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையும் தினகரனையுமே எடப்பாடி பழனிசாமி நீக்கும்போது, எடப்பாடியை முதல்வராக்கிய தினகரன், இந்த ஆட்சியைக் கலைக்கமாட்டாரா?

பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை - 1.

‘நாங்கள் யாருக்கும் அடிமையும் அல்ல. கூஜா தூக்கவும் மாட்டோம்’ என்கிறாரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி?

இதை டெல்லியில் போய் அவர் சொல்வாரா?

எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

தினகரனை மட்டும் அனுசரித்துச் சென்றால், அ.தி.மு.க பழைய பலம் பெறுமல்லவா?


தினகரன் என்ன ஜெயலலிதாவா... எம்.ஜி.ஆரா?

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

சபாநாயகர் தனபாலின் நடவடிக்கை மூலமாக, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதா... அல்லது, ஜனநாயகப் படுகொலை தடுக்கப்பட்டுள்ளதா?


‘எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர்மீது நடவடிக்கை எடுக்காமல், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 பேர்மீது நடவடிக்கை எடுப்பது ஜனநாயகப் படுகொலை அல்லவா?’ - இது டி.டி.வி.தினகரன் பக்கம் இருக்கும் அந்த 18 பேரும் எழுப்பும் கேள்வி.

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

தரம்கெட்ட அரசியல் எங்கே நடக்கிறது?

எங்கே நடக்கவில்லை என்று கேளுங்கள்!

 பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

அமைச்சரவை மாற்றம் என்பது இனி இருக்க வாய்ப்பில்லை, அப்படித்தானே?

ஆமாம்! யாரையாவது ஒருவரை அமைச்சரவையிலிருந்து தூக்கி, அவர் கோபத்தில் நான்கைந்து எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்துக்கொண்டு கலாட்டா செய்தால், ஆட்சி நாற்காலி ஆடிவிடாதா? அதனால், எடப்பாடி அந்த மாதிரியான ரிஸ்க் எடுக்கமாட்டார். எந்த மாதிரியான ரிஸ்க்கும் எடுக்கமாட்டார்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்.


தேசிய கீதத்துக்கு மக்கள் மதிப்புத் தருகிறார்களா?


 சினிமா தியேட்டர்களில்கூட மக்கள் கம்பீரமாக எழுந்துநிற்கிறார்கள்!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், சென்னை-110.

‘திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க ரஜினியுடன் கமல் இணைய வேண்டும்’ என்று தமிழருவி மணியன் வலியுறுத்துகிறாரே?


திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்பது, ரஜினியுடன் கமல் இணைவது என்பதெல்லாம் தன்னைமீறிய விஷயங்கள் என்று தமிழருவி மணியன் இன்னமுமா உணரவில்லை. வைகோவையும், விஜயகாந்த்தையும், ஜி.கே.வாசனையும் ஒவ்வொரு மேடையாகப் புகழ்ந்துவந்த மணியன், இப்போது ரஜினி, கமலில் வந்து நின்றுள்ளார். இத்தோடு அவர் பரப்புரையை நிறுத்திக்கொள்வதுதான் அவரது தமிழுக்கு நல்லது.

விருப்பப்பட்டால், சாக்கடையாக மாறிவிட்ட தேர்தல் அரசியலில் தமிழருவி மணியன் மூழ்கலாம். அதைவிட்டுவிட்டு, மேலே நின்றுகொண்டு சாக்கடையை எடுத்துப் பூசிக்கொள்வது எதற்கு??

கழுகார் பதில்கள்!

வழக்கறிஞர் அ.அருள்மொழி
 திராவிடர் கழக பிரசாரச் செயலாளர்


இன்றைய அரசியல் சூழலில், அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கூட்டு வைத்தால் மக்களால் அங்கீகரிக்கப்படுமா? எந்தக் கட்சி தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்? தமிழக அரசியலில் அடுத்த கட்டத் தலைவர்களாக யாரெல்லாம் முன் நிற்பார்கள்?

அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி என்பது கட்டாயக் கூட்டணியாகத்தான் அமையும். இரட்டை இலை இன்னமும் அ.தி.மு.க-வுக்கு வரவில்லை. வந்தால் அ.தி.மு.க-வின் வாக்குவங்கி கொஞ்சம் தக்கவைக்கப்படும். இரட்டை இலைக்கு வாக்களிக்கும் கிராமப்புற வாக்காளர்கள் அனைவரும் தாமரைக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது. தாமரைக்கு வாக்களிக்கும் நகர்ப்புற வாக்காளர்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. கூட்டணியில் வாக்கு பரிமாற்றம் நிகழ்வது அவசியம். அது இல்லாமல், இரண்டு கட்சிகளும் கடுமையாக சேதாரம் அடையக்கூடும்.

அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்வரைதான் எடப்பாடியும் பன்னீரும் அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களாக வலம்வருவார்கள். ஆட்சி இல்லாவிட்டால் இருவரும் பதுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க என்ற கட்சியை தினகரன்தான் வழிநடத்தும் சூழல் வரலாம். இந்த அடிப்படையில், தி.மு.க-வுக்கு மாற்றாக தினகரன் தலைமையிலான அ.தி.மு.க இருக்கக்கூடும்.

இன்றைய சூழ்நிலை இதைத்தான் காட்டுகிறது.

படங்கள்: க.தனசேகரன், தே.அசோக்குமார், கே.ஜெரோம்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism