“பொதுக்குழு உறுப்பினர் பதவியால் தொடங்கிய பிரச்னை இப்போது பொதுவெளியில் பற்றி எரிகிறது” என்று குஷ்பு- கராத்தே தியாகராஜன் மோதல் பற்றி கமென்ட் அடிக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் உட்கட்சித் தேர்தல், கடந்த இரண்டு மாதங்களாக நடந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த 6-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தென் சென்னை மாவட்டச் செயலாளர் கராத்தே தியாகராஜன், “காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மயிலாப்பூர் பகுதியிலிருந்து பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். ஆனால், அவர் உறுப்பினர் படிவமும் வாங்கவில்லை... பொதுக்குழு உறுப்பினருக்கு நாமினேஷன் செய்யவுமில்லை. அவரை எப்படிப் பொதுக்குழு உறுப்பினராக நியமித்தார்கள்?” எனக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

டென்ஷனானார் குஷ்பு... “கொள்கைக்காகவும் சேவை செய்யவும் மட்டுமே நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். கராத்தே தியாகராஜனுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்றார் அவர். இது கராத்தே தியாகராஜன் தரப்பைக் கொதிப்படையச் செய்தது.

கராத்தே தியாகராஜன் நம்மிடம், “கட்சியின் முன்னணித் தலைவர்களான சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்களே அவர்கள் பகுதியில் பணம் கட்டி நாமினேஷன் செய்துதான் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். குஷ்பு எந்த வழிமுறையையுமே பின்பற்றாமல் பொறுப்புக்கு வருகிறார். அவரைப் பார்த்து நான் பயப்படுவதாகச் சொல்கிறார். ‘அம்மா’வைப் பார்த்தே பயப்படாதவன் நான், அம்மா கேரக்டரில் நடிப்பவரைப் பார்த்தா பயப்படப் போகிறேன்? சேவைசெய்ய கட்சிக்கு வந்ததாகச் சொல்பவர், சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய தொகுதிக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியது ஏன்? இதை அவரால் மறுக்கமுடியுமா?” என்றார்.

குஷ்பு நம்மிடம், “இளங்கோவன் தலைவராக இருக்கும்போதே பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகச் சேர்ந்துவிட்டேன். 2019 வரை அந்தப் பதவியின் காலம் உள்ளது. நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர். அவர் தேர்தலில் நின்றபோது அவருக்கு இரவு பகலாகப் பிரசாரம் செய்தேன். அதற்கு அவர் எவ்வளவுப் பணம் கொடுத்தார் என்று முதலில் கேளுங்கள். பெயர், புகழ், பணம் எல்லாத்தையும் சம்பாதித்தப் பிறகுதான் அரசியலுக்கு வந்துள்ளேன். அதைத் தெரிந்துகொள்ள அவர் மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தவேண்டும்” என்றார்.

அடுத்த அதிரடிக்கு காங்கிரஸ் கட்சி தயாராகிவிட்டது.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசலு