சம்பத்குமாரி, பொன்மலை.

ஜெயலலிதாவின் ஆவி தங்களைச் சுற்றி நின்று காப்பாற்றுவதாகவும், அதனால் யாரும் தங்கள் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே... மக்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்?

ஆவி காப்பாற்றுவதாகச் சொல்வதால் தான் பயமாக இருக்கிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை. ஆவிதான் ஆட்சி நடத்துகிறது என்றால், நாளை ஏதாவது பிரச்னையோ குற்றச்சாட்டோ எழுந்தால், ‘எங்களுக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவின் ஆவியைத்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டுத் தப்பிக்கலாம் என்ற தந்திரமோ இது!

தாமோதரன், வேலூர்.

ஜெயலலிதா இறந்த தினத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியலையும், இப்போது இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியலையும் மக்களுக்குத் தெரிவிக்க அவர்களால் இயலுமா?

நீங்கள் எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது. அதனாலேயே சொல்ல மாட்டார்கள். நீங்கள் எம்.எல்.ஏ-க்களை மட்டும் கேட்கிறீர்கள். அமைச்சர்களை ஏன் விட்டுவிட்டீர்கள்? ‘மணி’யான அமைச்சர் ஒருவர், சில வாரங்களுக்குமுன் 20 கோடி ரூபாய்க்கு சென்னையில் வீடு வாங்கியுள்ளார் என்று ஒரு தகவல் உலவுகிறது.

டி.சந்திரன், ஈரோடு.

அரசியல்வாதியாவதற்கு அடிப்படைத் தகுதிகள் எவை?

எதுவுமே தேவையில்லை என்று சிலர் நிரூபிக்கிறார்கள்.

ச.புகழேந்தி, மதுரை-14.

‘2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25-ம் தேதிக்குப் பிறகு வழங்கப்படும்’ என்று நீதிபதி ஷைனி அறிவித்திருப்பது..?

தி.மு.க தரப்புக்குத் திகிலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் தி.மு.க-வின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். ஆ.ராசாவும் கனிமொழியும் விடுவிக்கப்பட்டால், அடுத்துவரும் தேர்தலை அக்கட்சி தைரியமாக எதிர்கொள்ளும். அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் சிக்கல்தான்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான்’ என்று சொல்லிவந்த பி.ஜே.பி., இன்று அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேரத் துடிக்கிறதே?

அது வேற வாய். இது வேற வாய். கூட்டணி சேர்ந்தால்தான் நாலு சீட்டாவது ஜெயிக்க முடியும் என்பது பி.ஜே.பி-க்குத் தெரியாதா? அவர்களுக்கும் சட்டமன்றத்துக்குள் செல்வதற்கு ஆசை இருக்காதா?

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

எது தர்மயுத்தம்?

நோக்கம் அதர்மமாக இல்லாதது தர்மயுத்தம்.

திருப்பூர் அர்ஜுனன், அவிநாசி.

ஜெயலலிதா உருவ பொம்மையைக் கொலுவில் வைத்துவிட்டார்களே?

என்ன நடந்தது என்றே தெரியாமல் சமாதியில் வைத்ததைவிட, பொம்மையாக கொலுவில் வைப்பதில் தவறு இல்லைதான்.

ஸ்ரீராம், சேலையூர்.

தமிழக மக்களாகிய நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்..?

நிச்சயம் சரியான பாதையில் அல்ல!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘தமிழகத்தில் நிலையான ஆட்சிக்கு ஒரே தீர்வு தேர்தல்தான்’ என்கிறாரே டி.டி.வி.தினகரன்?

எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் எதனால் வீழ்த்தமுடியுமோ அதுதானே தினகரனுக்கு விருப்பமான தீர்வாக இருக்க முடியும்? ‘இவர்கள் இருவரும் பதவி இருப்பதால்தானே ஆடுகிறார்கள். பதவி பறிக்கப்பட்டால் நம் பக்கம் வந்துவிடுவார்கள்’ என்று தினகரன் நினைக்கிறார். அதனால் எழும் குரல்தான் இது.

சம்பத்குமாரி, பொன்மலை.

காங்கிரஸ் ஆட்சிக்கு சந்திராசாமி... மோடி ஆட்சிக்கு பாபா ராம்தேவ்... சரியா?

சந்திராசாமியும் பாபா ராம்தேவும் சாமியார்கள் என்பதைவிட நல்ல வியாபாரிகள் என்பதுதான் மிகச் சரி.

வி.ஐ.பி கேள்வி

புலவர் புலமைப்பித்தன்
முன்னாள் அவைத்தலைவர், அ.தி.மு.க.

இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் நிறைவேறாத வரையில் உண்மையான இந்தியாவின் முகம் தெரியுமா?

மிகப் பரந்து விரிந்த பரப்பு கொண்டது இந்தியா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், அவற்றின் உட்பிரிவுகள் எனக் கலவையான மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இவர்கள் ஒன்றுபட்ட நிலப்பரப்பாக, ஒரே மன்னரின் ஆளுகையின்கீழ் இதற்குமுன் இருந்ததில்லை. பல பெரும் மன்னர்கள், குறுநில மன்னர்கள், சமஸ்தானங்கள், வேற்று நாடுகளின் ஆளுகையில் நம்நாடு நெடுங்காலமாக இருந்தது. இவை அனைத்தையும் பகுதி பகுதியாக வென்ற, ஒரு தொகுதியாக பிரிட்டிஷ் ஆட்சி மாற்றியது. அப்படி மாற்றியதுதான் அவர்களுக்கே வினையாக ஆனது. ஒரே தொகுப்பாக மாறிய மக்கள், ஒன்றுகூடி பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்.

நாம் வேறுவேறு இனம், வேறுவேறு மொழி, வேறுவேறு மதம் என்பதை மறந்து, ஒன்றுபட்டு எதிர்த்ததால் இந்தியா விடுதலை பெற்றது. விடுதலைப் போராட்டக் காலத்தில்கூட நம்மோடு ஒன்று சேராத பல சமஸ்தானங்கள், விடுதலைக்குப் பிறகு நம் நாட்டுடன் மனப்பூர்வமாக ஒன்று சேர்ந்தன.

இந்த இரண்டுக்கும் அடிப்படைக் காரணம், ‘வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்’ என்பதுதான். அதுதான் இந்தியாவைப் பிணைத்து வைத்திருக்கும் அடிப்படை தாரக மந்திரம். குஜராத் கைத்தறிக் கண்காட்சியைத் திறந்துவைக்கச் சென்ற பிரதமர் மோடி, ஒவ்வொரு மாநிலத்து மக்களும் விரும்பி அணியும் உடைகளின் பெருமைகளைப் பற்றித்தான் பேசினார். அந்தந்த மாநில மக்களின் கலாசாரத்துக்கு ஏற்ற உடைகளைத் தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். உடையிலேயே இவ்வளவு வேறுபாடு என்றால், உணர்வில் எவ்வளவு வேறுபாடு இருக்கும்! அந்த வேறுபாட்டை உணர்ந்து, மதித்து, உரிய மரியாதை கொடுத்து மக்கள் வாழ்ந்தாக வேண்டும். உண்மையான இந்தியாவின் முகம், அப்போதுதான் நமக்கும் தெரியும்; உலகத்துக்கும் தெரியும்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், கே.ஜெரோம்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!