Published:Updated:

விஜயகாந்த் தேர்தல் வெற்றி செல்லுமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

விஜயகாந்த் தேர்தல் வெற்றி செல்லுமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு
விஜயகாந்த் தேர்தல் வெற்றி செல்லுமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு
விஜயகாந்த் தேர்தல் வெற்றி செல்லுமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

சென்னை: தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

##~~##
இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் விதிகளை மீறி தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் விஜயகாந்த் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 7ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த நிலையில், வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளார்.
அப்போது, விஜயகாந்த் வெற்றி செல்லுமா? என்பது தெரிந்துவிடும்.