Published:Updated:

கொசுவை ஒழிக்க போராட்டத்தில் இறங்கிய ஸ்டாலின்!

கொசுவை ஒழிக்க போராட்டத்தில் இறங்கிய ஸ்டாலின்!
கொசுவை ஒழிக்க போராட்டத்தில் இறங்கிய ஸ்டாலின்!
கொசுவை ஒழிக்க போராட்டத்தில் இறங்கிய ஸ்டாலின்!

சென்னை: கொசு ஒழிப்பு, டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 16ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.

வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாவட்ட - பகுதி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

##~~##
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி்ல், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேடு குறித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து வரும் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.
நிர்வாக சீர்கேடு என்றால், கொசு ஒழிப்பு, டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கக்கூட நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி நிர்வாகம் உள்ளது என்றும் எனவே, அதை கண்டித்து இந்த அறப்போட்டம் நடைபெறுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.