Published:Updated:

நள்ளிரவு கைது... நீதிமன்ற அவமதிப்பு... சுதா பரத்வாஜ் கைதில் காவல்துறையின் அத்துமீறல்கள்!

நள்ளிரவு கைது... நீதிமன்ற அவமதிப்பு... சுதா பரத்வாஜ் கைதில் காவல்துறையின் அத்துமீறல்கள்!

``காந்தியின் சுயசரிதையை எழுதியவனாகக் கூறுகிறேன், காந்தி உயிருடன் இருந்திருந்தால், அவர் தன் வழக்கறிஞர் அங்கியை அணிந்துகொண்டு, நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜுக்கு ஆதரவளித்திருப்பார். மோடி அரசு அவரைக்கூடக்  கைது செய்திருக்கும்!” - ராமசந்திர குஹா!

நள்ளிரவு கைது... நீதிமன்ற அவமதிப்பு... சுதா பரத்வாஜ் கைதில் காவல்துறையின் அத்துமீறல்கள்!

``காந்தியின் சுயசரிதையை எழுதியவனாகக் கூறுகிறேன், காந்தி உயிருடன் இருந்திருந்தால், அவர் தன் வழக்கறிஞர் அங்கியை அணிந்துகொண்டு, நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜுக்கு ஆதரவளித்திருப்பார். மோடி அரசு அவரைக்கூடக்  கைது செய்திருக்கும்!” - ராமசந்திர குஹா!

Published:Updated:
நள்ளிரவு கைது... நீதிமன்ற அவமதிப்பு... சுதா பரத்வாஜ் கைதில் காவல்துறையின் அத்துமீறல்கள்!

``வரும்  2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளே இந்தக் கைது நடவடிக்கை. அவர்கள் பட்டப்பகலில் கொலை செய்பவர்களையும் விசாரணையின்றி தாக்குதல் நடத்துபவர்களின் மீதும் நடவடிக்கை எடுப்பதைவிடுத்து, வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். இந்தச் சூழ்நிலை, அவசரக்கால பிரகடனத்தைவிடவும் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்தியா எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இனியும் இதையெல்லாம் அனுமதிக்க முடியாது. அப்படிச் செய்தால், நாம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் சுதந்திரத்தை நிச்சயம் இழப்போம்!”

``காந்தியின் சுயசரிதையை எழுதியவனாகக் கூறுகிறேன், காந்தி உயிருடன் இருந்திருந்தால், அவர் தன் வழக்கறிஞர் அங்கியை அணிந்துகொண்டு, நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜுக்கு ஆதரவளித்திருப்பார். மோடி அரசு அவரைக்கூடக் கைது செய்திருக்கும்!”

கடந்த 28-ம் தேதி நள்ளிரவு, பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் நடப்பதாகச் சந்தேகித்து, கிட்டதட்ட 10 மனித உரிமை ஆர்வலர்களின் வீடுகளில், புனே காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அதில் ஐந்து பேரைக் கைது செய்த சம்பவம், சமூக ஆர்வலர்களையும் எழுத்தாளர்களையும் வழக்கறிஞர்களையும் பெரும் அதிர்ச்சிக்குளாக்கியிருக்கின்றது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, எழுத்தாளர் அருந்ததி ராயும் வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹாவும் கூறிய கருத்துகள்தான் மேலே குறிப்பிட்டுள்ளவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அதிரடி சோதனையை, மகாராஷ்ட்ரா, தெலங்கானா, டெல்லி, கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடத்தியுள்ளனர் புனே காவல்துறை. இதில் ஃபரிதாபாத்தைச் (Faridabad) சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், டெல்லியைச் சேர்ந்த கெளதம் நவ்லாகா, ஹைதராபாத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வரவர ராவ் , மும்பையைச் சேர்ந்த  அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரைக் கைது செய்தனர் . 

கடந்த ஜனவரி 1-ம் தேதி, பீமா கொரெகெளன் (Bhima Karegoen) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினத்தின் கொண்டாட்ட விழாவில், தலித் மக்களுக்கும் ஆதிக்க மராட்டிய சாதியினருக்கும் நடந்த சாதி கலவரத்தைத் தொடர்பாகவும், இவர்களின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.

ஆனால், மனித உரிமை ஆர்வலர் சுதா பரத்வாஜ் வீட்டில், நள்ளிரவு சோதனையிட்டது, சோதனை வாரண்டுக்குப் பதிலாக, வேறொரு ஆவணத்தைக் காண்பித்தது எனக் காவல்துறையினர் அத்துமீறிச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களின் கைது குறித்தும் சட்டத்தை மீறி நடந்தகொண்ட காவல்துறையினர் நடவடிக்கைகள் குறித்தும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்குமாறு கோரியும் வரலாற்றாசிரியர் ரொமிலா தாமர் உட்பட ஐந்து பேர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். 

செவ்வாய்க்கிழமை அதிகாலை, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த காவல்துறையினர் 10 பேர், சார்ம்வுட் (Charmwood) கிராமத்தில் இருந்த சுதா பரத்வாஜின் வீட்டில் கிட்டதட்ட ஒரு மணிநேரம்  அதிரடி சோதனை நடத்தினர். இதற்கிடையில் சுதா, அவர்களிடம் சோதனை வாரண்ட் காண்பிக்கமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அவர்களிடம் அந்த ஆவணங்களை இல்லை. அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களைக் காண்பித்திருக்கின்றனர். மேலும் அவர்கள், யாரையும் தொடர்புகொள்ளாதபடி தடுத்திருக்கின்றனர். அதன்பின்னர், சுதா தன் வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, தன்னை நேரடியாக மகாராஷ்ட்ரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகச் செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்  30-ம் தேதி நீதிமன்ற உத்தரவு வரும்வரை அவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், புதன்கிழமை நள்ளிரவு வேளையில், இனோவா காரில், டெல்லி விமான நிலையத்துக்கு புனே காவலர்கள் அவரை அழைத்துக்கொண்டு செல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று உச்ச நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அமெரிக்காவில் பிறந்த சுதா பரத்வாஜ், 18 வயது கடந்ததும், தன் அமெரிக்க குடியுரிமத்தைத் துறந்து, கான்பூர் ஐ.ஐ.டி-யில் படித்துக்கொண்டே, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பகுதிநேரமாகக் கல்வி கற்பித்தார். அதன் பிறகு, டெல்லி சட்ட கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில், தொழிலாளர்கள் மற்றும் பழக்குடி மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism