Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்குவை முற்றாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கிறதா?


முதலில் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவி வருகிறது என்பதை அதிகாரிகளும், முதலமைச்சரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதை மறைப்பதன் மூலமாக ஒழித்துவிட முடியாது.

ஒரு காலத்தில் மக்களை மொத்த மொத்தமாக காவு வாங்கும் கொள்ளை நோய்கள் இருந்தன. அது, மருத்துவத்துறையில் எந்த வசதிகளும் இல்லாத காலம். நவீன வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் டெங்கு போன்ற ஒரு கொள்ளை நோய் ஏராளமான உயிர்களைக் காவு வாங்கினால், அதற்கு அரசின் அலட்சியம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். இப்படி ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு, அரசின் கையில்தான் இருக்கிறது. அரசும், மக்களும், தொண்டு நிறுவனங்
களும் இணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது. ஆனால், அதைப்பற்றிய அக்கறையே இல்லாமல் நாற்காலி கவலையிலேயே முதலமைச்சரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் டெங்கு நோயைவிட அதிக அச்சத்தைத் தருகிறது.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஃபாரூக், திருச்சி.

ராகுல் காந்தியை கிறிஸ்தவர் என சுப்பிரமணியன் சுவாமி சொல்லியிருக்கிறாரே... இது என்ன புதுக் குழப்பம்?

வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க டீ பார்ட்டி நடத்தி சோனியாவை அழைக்கும்போது, ராகுல் கிறிஸ்தவர் எனத் தெரியாதா சுவாமிக்கு?

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

கமலுக்கு ரஜினி துணை நிற்பாரா?

ரஜினிக்கு இதெல்லாம் தேவைதானா?

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.


அரசியலில் இருப்பவர்கள் அடிக்கடி திருப்பதி சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்து வருவதற்கு விசேஷ காரணம் ஏதாவது உண்டா?


அரசியலில் இல்லாதவர்களும்தான் திருப்பதிக்குச் சென்று வருகிறார்கள். அது, அவரவர் பக்தி.

சங்கீதா நாகராஜன், கோவை-6.

நிஜத்தில் நான்கு காளைகள் சேர்ந்து சிங்கத்தை வீழ்த்த முடியுமா?

நான்கு காளைகளுக்கும் சிங்கத்தை வீழ்த்துவது ஒன்று மட்டுமே நோக்கமாக இருக்குமானால் நிச்சயம் வீழ்த்த முடியும்.

காளைகளுக்குள் ‘யார் பெரியவன்’ என்ற ஈகோ இருக்கக்கூடாது. சிங்கத்துடன் ரகசிய சிநேகிதம் இருக்கக்கூடாது. ஒற்றுமையும், புரிதலும் நால்வருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அப்படியிருந்தால் சிங்கத்தை நிச்சயம் வீழ்த்தலாம்.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.


யோசித்துச் செய்யும் விஷயங்கள்கூட சில நேரங்களில் தோல்வியில் முடிந்து விடுகின்றனவே?


ரொம்ப யோசித்தால் அப்படித்தான் நடக்கும்!

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.


காங்கிரஸ் ஆண்டபோதும், பி.ஜே.பி ஆளும்போதும் சி.பி.ஐ-யின் செயல்பாடுகள்...?


தேவைப்படும்போது மட்டும் ஏவப்படும்; செயல்படும்; நடவடிக்கை எடுக்கும். இதில் காங்கிரஸ், பி.ஜே.பி என எந்த வித்தியாசமும் இல்லை.

கழுகார் பதில்கள்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

‘சசிகலா குடும்பத்தினருக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே?


சொல்வது ஜெயக்குமார் என்பதால் உண்மையாக இருக்கலாம். கடந்த 20 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தை அருகில் இருந்து பார்த்தவர் அவர். அவரது வாக்குமூலத்தையே ஆதாரமாக வைத்து சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கலாம். இதுபற்றி விசாரிக்கச் சொல்லி, நீதிமன்றத்தில் யாராவது பொதுநல வழக்குப் போடக்கூடும். அல்லது நீதிபதிகளே தாமாக முன்வந்தும் இதை விசாரிக்கலாம். 20 ஆயிரம் கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயம் அல்ல. இதுபற்றிச் சொல்வதும் யாரோ வழிப்போக்கர் அல்ல. கறுப்புப்பணத்தை ஒழிக்க முயற்சி செய்யும் பிரதமர் மோடிக்கு இது மிகச் சிறந்த க்ளூ. இது கணக்கில் காட்டப்பட்ட பணமா, கணக்கில் காட்டப்படாத பணமா என்பதை மத்திய நிதித்துறை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை ஜெயக்குமாரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

டி.கே.மோகன், ஆதம்பாக்கம்.

குஷ்பு நேற்று தி.மு.க-வில் இருந்தார். இன்று காங்கிரஸில் இருக்கிறார். நாளை..?


குஷ்பு எந்தக் கட்சியில் இருந்தாலும் சிக்கல் ஏற்படுகிறது. அதற்கு அவர் காரணம் அல்ல. அவரது பாப்புலாரிட்டி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தி.மு.க-வில் அவருக்குக் கிடைத்த முக்கியத்துவம் பலருக்குப் பிடிக்கவில்லை. விரட்டப்பட்டார். காங்கிரஸ் கட்சியிலும் இதேபோன்ற ஈகோ யுத்தம்தான். இந்தச் சூழ்நிலையிலும், ‘நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன்’ என்று குஷ்பு சொல்லி வருகிறார். ஒருவேளை அவரால் காங்கிரஸில் இருக்கமுடியாத சூழல் ஏற்பட்டால், மறுபடியும் அவர் தி.மு.க-வுக்குப் போனாலும் போகலாம்.

வி.ஐ.பி கேள்வி

கங்கை அமரன், இசையமைப்பாளர் - பி.ஜே.பி பிரமுகர்

கழுகார் பதில்கள்!

‘‘பிரதமரில் ஆரம்பித்து தமிழக அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் மரியாதை இல்லாமல் ‘வாடா... போடா...’ தன்மையுடன் பேசி வரும் சீமானின் மேடை நாகரிகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

பெரும்பாலானவர்களை ‘வாடா... போடா...’ என்றுதான் சீமான் பேசி வருகிறார். இது மிகமிகத் தவறான போக்கு. தமிழர்களுக்கே தலைவனாக வளர நினைப்பவர், இப்படியெல்லாம் மரியாதையின்றி ஒருமையில் பேசுவது சரியல்ல. உதாரணமாக... சமீபத்தில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், சாதி பற்றி பேசியதை சீமான் கண்டித்தார். அங்கே சீமான் சொன்ன கருத்துகளை விட்டுவிடுவோம். ஆனால், பதில் சொன்ன தொனி தவறாகவே இருந்தது. சீமானை யாராவது ‘அன்பின்’ காரணமாகக்கூட ‘டா’ போட்டுப் பேசினால், அவரின் தம்பிகள் ஏற்பார்களா?

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், பா. காளிமுத்து, எம்.விஜயகுமார்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!