Published:Updated:

சிவிசி நியமனத்தில் தவறு: பிரதமர் பொறுப்பேற்பு

புதுடெல்லி, மார்ச் 7,2011

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்ட போது, மதிப்பீட்டில் தவறு நேர்ந்துவிட்டதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் தாம் ஏற்பதாகவும், பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ##~~##

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் கூறுகையில், பி.ஜே. தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்ததின்போது, மதிப்பீடு செய்வதில் தவறு நேர்ந்துவிட்டது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இது விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு, அதனை மதிக்கவும் செய்கிறோம்.

புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் மற்றும் நெறிமுறைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.