Published:Updated:

கூட்டுறவு சங்க தேர்தலில் போலி வாக்காளர்கள் - கோவையில் குடுமிபிடி (படங்கள்)

கூட்டுறவு சங்க தேர்தலில் போலி வாக்காளர்கள் - கோவையில் குடுமிபிடி  (படங்கள்)
கூட்டுறவு சங்க தேர்தலில் போலி வாக்காளர்கள் - கோவையில் குடுமிபிடி (படங்கள்)

கோவை: ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள் என்று சொல்லி கூட்டுறவு சங்க‌ தேர்தலை புற‌க்கணித்து விட்டது தி.மு.க. அவர்கள் சொன்னது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
 

கூட்டுறவு சங்க தேர்தலில் போலி வாக்காளர்கள் - கோவையில் குடுமிபிடி  (படங்கள்)

தமிழகம் முழுவதும் உள்ள 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக இன்று நடந்த தேர்தலில் ஆங்காங்கே மறியல், முற்றுகை என ஆளும் கட்சியினரை எதிர்த்து களேபர காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கோவை மாவட்டத்தில் 210 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 180 கூட்டுறவு சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் 30 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
 

கூட்டுறவு சங்க தேர்தலில் போலி வாக்காளர்கள் - கோவையில் குடுமிபிடி  (படங்கள்)

இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய சிறை அருகே உள்ள கோவை மாவட்ட மகளிர் ஆடை தயாரிப்பாளர் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது.மொத்தம் 7 பதவிகளுக்கான இத் தேர்தலில் அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரடியாக போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் அதிமுகவினர், சங்கத்துக்கு தொடர்பில்லாத நபர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்து இருப்பதாகவும், பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கும் தங்களை வாக்களிக்க அனுமதிக்க மறுப்பதாகவும் தங்கள் பெயர்களில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாகவும் ஆடை தயாரிப்பாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.
 

கூட்டுறவு சங்க தேர்தலில் போலி வாக்காளர்கள் - கோவையில் குடுமிபிடி  (படங்கள்)

இதைக் கண்டித்தும் முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு மறியல் செய்ய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ்.

##~~##
கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்தும்படி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
செய்தி,  படங்கள்: ச.ஜெ.ரவி