Published:Updated:

“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”
பிரீமியம் ஸ்டோரி
“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

Published:Updated:
“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”
பிரீமியம் ஸ்டோரி
“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாக தனக்கே உரிய பாணியில் பேசினார். ‘‘சாதாரண காய்ச்சல் வந்தாலே டெங்கு என்று மக்கள் பயப்படுகிறார்கள். என்னுடைய வீடு இருக்கும் செல்லூர் பகுதியிலேயே மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது, சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. தேங்குகின்ற தண்ணீரை உடனே அப்புறப்படுத்துகிற ‘சூப்பர் சக்கர்’ வாகனம் வாங்குவதற்கு என்னுடைய எம்.எல்.ஏ நிதியிலிருந்து 56 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சொல்லியும், மாநகராட்சி அதற்கான திட்டத்தைத் தயாரிக்கவில்லை. டெங்கு பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தப் பணியில் தன்னார்வ அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்று அதிரடியாகப் பேசிவிட்டுக் கிளம்பியவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

“சுதீஷ் யாருன்னு தெரியலையே?”

‘‘டெங்கு விழிப்பு உணர்வுப் பணிகளில் தன்னார்வலர்களும் இணைய வேண்டுமென்று பேசினீர்கள். ஆனால், திருச்சியில் நிலவேம்பு கஷாயம் கொடுத்த சுதீஷ் மீது போலீஸ் வழக்குப் போட்டுள்ளதே?’’ என்றபோது, ‘‘சுதீஷா... யாரது?’’ என்று ஷாக் கொடுத்தார்.

‘‘தே.மு.தி.க-வின் துணைப்பொதுச்செயலாளர். விஜயகாந்தின் மைத்துனர்...’’ என்றோம்.

‘‘அப்படியா? எனக்குத் தெரியாதே. அவர் அனுமதி வாங்கி நிகழ்ச்சி நடத்தினாரா என்று தெரியவில்லை. அதனால் போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.’’

‘‘டெங்கு பற்றி புதுப்புது விளக்கங்களைக் கூறும் உங்களுக்கு நோபல் பரிசு தரலாம் என டாக்டர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளாரே?’’

‘‘அவர் டாக்டர் என்பதால் அப்படித்தான் சொல்வார். நான் பார்க்கிறதை வைத்தும் மக்கள் சொல்கிற தகவல்களை வைத்தும் கருத்துக் கூறினேன். ‘அந்தக் காலத்திலிருந்த சாணி தெளித்துக் கோலம் போடும் பழக்கம் மறைந்துவிட்டதால், கொசு அதிகமாக உற்பத்தியாகி விட்டது’ என்று சொன்னேன். இது தப்பா? யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை.’’

‘‘ ‘டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு சரியாக செய்யவில்லை’ என ஸ்டாலின் கூறியுள்ளாரே?’’

‘‘அவர் பதவி ஆசையில் அப்படிச் சொல்கிறார். எதிர்க் கட்சி என்றாலே இப்படித்தான் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். வெற்று அரசியலுக்காக அப்படி சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். இதேபோல, ‘டெங்கு ஒழிப்பு நடவடிக்கை களுக்காக உள்ளாட்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ எனச் சில ஊழியர் சங்கங்கள் வதந்தியைக் கிளப்புகிறார்கள். பணம் இல்லையென்றால் எப்படி உள்ளாட்சிகளில் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியும்? இந்த ஆட்சியில் மக்கள் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.’’

- செ.சல்மான்
படம்: வி.சதீஷ்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!