``தொகுதிப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை... டெங்குவால் தொடர்ந்து பறிபோய்க்கொண்டி ருக்கும் உயிர்களுக்கு மத்தியில் பதவி பறிபோய்விடக் கூடாது என்று அலைகிறார்கள்’’ - ஆட்சியாளர்கள் பற்றிய மக்களின் புலம்பல் இப்படித்தான் ஒலிக்கிறது. ஆனால், அ.தி.மு.க கோஷ்டிகளின் காமெடிக் கூட்டங்களுக்குப் பஞ்சம் இருப்பதில்லை.

எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் இணைந்து மிரட்டும் அணி ஒருபுறம் என்றால், தினகரன் அணி இன்னொருபுறம் எனப் போட்டி போட்டுக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொதுக்கூட்டங்களை நடத்தி, ஆளாளுக்கு ஒரு கருத்தைத் தெரிவித்துவிட்டுச் செல்கிறார்கள். கேட்பவர்கள்தான் மண்டை காய்கிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு தொடக்க விழாக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிறப்புப் பேச்சாளர், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இதில் தேனி எம்.பி பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்பட பன்னீர் தரப்பினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதையறிந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், தானும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தப்போவதாகத் தேனி மாவட்டம் முழுவதும் அறிவித்துவிட்டு, உத்தமபாளையத்தில் கூட்டம் நடத்தினார். இதில், எம்.எல்.ஏ-க்கள் பெரியகுளம் கதிர்காமு, தஞ்சாவூர் ரங்கசாமி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமும் சராசரியாக அரை டஜன் டெங்கு மரணங்கள் நடக்கும் இந்த நிலையில், பெரிய குளத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘‘இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கப்போகிறது. ஏனென்று சொன்னால், 50 மாவட்டச் செயலாளர்களில் 49 மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களில் 46 பேரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். 98 சதவிகிதம் பொதுக்குழு உறுப்பினர்கள், கிளைக்கழக, நகர, ஒன்றியச் செயலாளர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தேர்தல் கமிஷன் எப்படிச் சின்னத்தை மாற்றி வழங்க முடியும்? வேறு தீர்ப்பைச் சொல்ல முடியுமா? முடியவே முடியாது.

அதைவிட, டெல்லி நம்மிடம் இருக்கிறது. எதற்கும் பயப்பட வேண்டியது கிடையாது. ஒபாமாவோ, ட்ரம்போ வந்தாலுமே நமக்குப் பயம் கிடையாது. நமக்கு மோடி இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார். ‘எல்லாத்தையும் மேல இருக்கறவன் பாத்துக்குவான்’ என்பதுபோல அவர் பார்த்துக்கொள்வார்.

தி.மு.க-வில் எடப்பாடி அரசின் ஸ்லீப்பர் செல்களாக 40 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், அப்போது தினகரன் தரப்பு எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிக்குமானால், தி.மு.க-வில் இருக்கும் அந்த 40 பேரும் எடப்பாடி அரசுக்கு வாக்களிப்பார்கள்’’ என்று அதிரடி கிளப்பினார்.

உத்தமபாளையம் பொதுக்கூட்டத்துக்குத் தங்க தமிழ்ச்செல்வன் வந்ததும், அவருக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்காக அவரின் ஆதரவாளர் கள் மேடையை மொய்க்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் மேடையில் அதிகமானோர் ஏறியதால், பாரம் தாங்காமல் மேடை சரிந்து கீழே விழுந்தது. யாருக்கும் எந்தக் காயமும் இல்லை என்பதால், சரிந்த மேடையிலேயே பொதுக் கூட்டத்தைத் தொடங்கினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘‘நீண்டநாள்களுக்குப் பின்னர் தேனிக்குள் நுழைந்தது சந்தோஷமாக இருக்கிறது. ஆண்டிப்பட்டி முதல் இங்கு வந்து சேரும் வரை வழியெங்கும் எனக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அப்போதே நினைத்தேன்... பொதுக்கூட்டத்தில் ஏதாவது நடக்கும் என்று. அதேபோல மேடை சரிந்தது. இது தொண்டர்களின் உற்சாகத்தைக் காட்டுகிறது. எல்லோரும் எனக்கு மரியாதை செய்ய மேடை ஏறினார்கள். அதனால்தான் சரிந்தது. இதனால் யாரும் கவலையடையத் தேவை யில்லை.

கடந்த நாள்களில் நடந்தது எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் வேகமாக நடந்துவிட்டது. மூன்று மணி நேரத்தில் எங்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியை இதேபோல ஒரு பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டாடுவோம். எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் பக்கம் எங்களின் ஸ்லீப்பர் செல்கள் 20 பேர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் எங்கள் பக்கம் வரலாம். அதனால் நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை. ‘அது தருகிறார்கள், இது தருகிறார் கள்’ என்று சமீபத்தில் எடப்பாடி அணிக்குத் தாவிய கம்பம் எல்.எல்.ஏ ஜக்கையன்கூட எங்களின் ஸ்லீப்பர் செல்களில் ஒருவராக இருக்கலாம்’’ என்று பரபரப்பு கிளப்பினார்.

மக்கள் பணி செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி ஸ்லீப்பர் செல்களைக் கணக்கெடுத்துக் கொண்டு, அனைத்து மேடைகளிலும் விமர்சனங்களைச் சந்திக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள் ளார்கள். மேடைகளிலும் கார்களிலும் பவனி வருவதைக் குறைத்துக் கொண்டு தரையில் கால் வைத்தால் நல்லது!

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி