‘‘யார்கிட்ட என்ன பேசுறே? வா, விவாதம் வைப்போம். நீ என்ன செஞ்சிருக்கே... நான் என்ன செஞ்சிருக்கேன்னு பேசுவோம்!’’ - ஒரு பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க எம்.பி-யான அன்வர்ராஜாவை ஒத்தைக்கு ஒத்தை அழைத்தது எதிர்க்கட்சி அல்ல. அவர்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மணிகண்டன்தான் இப்படி சவால் விட்டிருக்கிறார்.

அ.தி.மு.க-வின் ராமநாதபுரம் எம்.பி அன்வர்ராஜா, அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் உள்ளார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வான மணிகண்டன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருக்கிறார். அன்வர்ராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். இது, அரசு நிகழ்ச்சி முதல் அரசியல் நிகழ்ச்சிகள் வரையில் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுவருகிறது. அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம், கடந்த மாதம் ராமநாதபுரத்தில் நடந்தபோது அமைச்சர் மணிகண்டன், தன் முயற்சியால்தான் அரசுத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாகப் பேசினார். இதனை மேடையில் மறுத்த அன்வர்ராஜா, “தன்னால்தான் எல்லாம் நடக்கிறது எனப் பேசுவது நாகரிகமற்ற செயல்’’ என மணிகண்டனுக்குப் பதிலடி கொடுத்தார். இதுகுறித்து ‘அன்வர்ராஜா பேச்சு... மின்சாரத்தை நிறுத்திய ஆளும் கட்சி!’ என்ற தலைப்பில் கடந்த 24.9.17 தேதியிட்ட ஜுவி-யில் விரிவாக எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அக்டோபர் 21-ம் தேதி நடந்தது. அதுதொடர்பான விளம்பரங்களில் மணிகண்டன், அன்வர்ராஜா பெயர்கள் போடப்பட்டிருந்தன. ஆனால், அன்வர்ராஜா பங்கேற்கவில்லை. அமைச்சர் மணிகண்டன் பேசியபோது, தனது சாதனைகளைப் பட்டியலிட்டார். ஒரு கட்டத்தில், ரூட்டை மாற்றிப் பேச ஆரம்பித்தார். “மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் நடக்கும் விஷயங்கள் குறித்து, போன கூட்டத்தில் பேசினேன். மத்திய அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியதற்கு, அந்த அமைச்சர் எனக்கு அனுப்பிய பதில் கடிதம் குறித்துச் சொன்னேன். ஆனால், இங்கு ஒரு மிகச் சிறந்த அறிவாளி (அன்வர்ராஜா) இருக்கிறார். அவர், காலங்காலமாக எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்தார். நான் சொன்ன பணிகள் அனைத்தும் 2016 ஜூனுக்குப் பிறகே நடக்கின்றன. அப்படியென்றால், நான் அமைச்சரான பின்புதான் அவை நடந்துள்ளன. மத்திய அமைச்சருக்கு மாநில அமைச்சர் நேரடியாகக் கடிதம் எழுதக்கூடாது என்கிறார் அந்த அறிவாளி.

எனக்குப் பக்குவமில்லை என்கிறார். யாருக்குப் பக்குவமில்லை? ஒரு அமைச்சரைப் பற்றி, ஆளும்கட்சிக்காரரே பொதுக்கூட்டத்தில் பேசுவதுதான் பக்குவமா? அமைச்சர் தலைமை தாங்கும் கூட்டத்துக்கு மிகவும் தாமதமாக வருகிறார். ‘நான் பேசிய பிறகே பேசுவேன்’ என வருகிறார். பெரிய மனிதர்தானே என அனுமதித்தோம். ஆனால், மண்டை கர்வமாகப் பேசியிருக்கிறார். யாரையும் நான் கண்ணியக்குறைவாகப் பேசமாட்டேன். ஆனால், என்னைப்பற்றி யாராவதுப் பேசினால், அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன்.

யார்கிட்ட என்ன பேசுறே? வா, டிபேட் வைப்போம். ஒவ்வொரு மேடையிலும் பேசுவோம். நீ என்ன செஞ்சிருக்கே. நான் என்ன செஞ்சிருக் கேன்னு பேசுவோம். 2016-க்கு முன், நீ எம்.பி. அப்போது நான் எம்.எல்.ஏ-வாக இருந்தேனா? நான் சொன்ன வேலைகளெல்லாம் ஏன் 2016-க்குப் பின் நடக்கின்றன. அதற்கு முன் ஏன் நடக்கவில்லை? நீ செய்வதில்லை. மக்களை ஏமாற்றக் கூடாது. இங்கு பேசிய சிறப்புப் பேச்சாளர் குமுதா, ‘மூன்று கல்யாணம் செய்தவர் கருணாநிதி’ எனக் கூறினார். மூன்று கல்யாணம் செய்தவர்கள் (அன்வர்ராஜா மூன்று திருமணங்கள் செய்தவர்) அ.தி.மு.க-விலும் இருக்கிறார்கள். எனக்கு மரியாதை கொடுத்தால், நானும் மரியாதை கொடுப்பேன். பொதுக்கூட்டத்தில் மரியாதைக்குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ, அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக நான் போவேன்’’ என அன்வர்ராஜாவை, எச்சரித்தார் மணிகண்டன்.

அமைச்சரின் பேச்சைக் கேட்டு, மேடையில் இருந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து அன்வர்ராஜாவிடம் கேட்டோம். “அமைச்சர் மணிகண்டன் பேசியது முழுமையாகத் தெரியவில்லை. போனில்கூட சிலர் சொன்னார்கள். அவர் இளைஞர். அப்படித்தான் பேசுவார். கோபம் அது இது எல்லாம் இருக்கத்தான் செய்யும். அவருக்குத் தெரிந்ததை அவர் பேசுகிறார். அதற்காக நான் எதிர்வினையாற்றப் போவதில்லை. என் கையை வெட்டி எடுத்துக்கொண்டு போனால்கூட, சிகிச்சை எடுக்கத்தான் செல்வேனே தவிர, எதிர் நடவடிக்கைகளில் இறங்கமாட்டேன்” என்றார் நிதானமாக. உண்மையில் இவர்களையெல்லாம் பேசவிடாமல் வைத்திருந்த ஜெயலலிதா சாமர்த்தியசாலிதான்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி