க.பாலகிருஷ்ணன், சுரண்டை.

மாநிலத்தில் ஓர் ஆட்சி சரியல்ல என்றால், அதை அகற்ற ஐந்து வருடங்களுக்கு மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்ற தேர்தல் ஆணையமோ, ஜனாதிபதியோ ஏன் இன்னமும் முயற்சி செய்யவில்லை?

ஜனாதிபதியோ, தேர்தல் ஆணையமோ இதற்கான காரணமாக இருந்தால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். ஜனாதிபதி அனைவருக்கும் பொதுவானவர்தான். தேர்தல் ஆணையம் தனித்து இயங்கும் அரசியல் சட்ட அங்கீகார அமைப்புதான். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகவில்லை. மத்தியில் யார் ஆளும்கட்சியோ, அவர்களுக்குச் சார்பான கட்சி மாநிலத்தை ஆளும்போது செய்யும் குறைபாடுகள் தட்டிக்கேட்கப்படுவதில்லை. அவர்களுக்கு எதிரான கட்சி மாநிலத்தை ஆண்டால், உடனே அஸ்திரங்களைப் பாய்ச்சுவார்கள். இதுதான் நடைமுறையாக இருக்கும்போது, மக்கள் எல்லா துயரங்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவிக்கத்தான் வேண்டும்.

சம்பத்குமாரி, பொன்மலை.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, கறுப்புப்பண பதுக்கல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2.93 லட்சம் போலி நிறுவனங்களை மத்திய அரசு கண்டுபிடித்திருப்பதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக 24 ஆயிரத்து 48 போலி நிறுவனங்கள் உள்ளதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது. இது எதைக் காட்டுகிறது?

இந்தியாவில் இரண்டு பேர் சேர்ந்தால் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிடலாம். வருடா வருடம் தவறாமல் வருமானக்கணக்குத் தாக்கல் செய்துகொண்டிருந்தால், எந்தப் பிரச்னையும் அவர்களுக்கு வராது. அவர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களா எனச் சந்தேகப்பட்டு விசாரிக்கவே மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். இந்திய கம்பெனிகள் சட்டத்தில் இருக்கும் இந்த ஓட்டையைப் பலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ச.புகழேந்தி, மதுரை - 14.

தமிழகத்தில் விரைவில் கவர்னர் ஆட்சி வருவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்களே?

மிகமிக விரைவில்!

தாமோதரன், வேலூர்.

இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 117 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை ஆதரவு இல்லை. இந்த நிலையில், அவர் ஆட்சியின் முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கலாமா? பல ஆயிரம் கோடிக்கு நெடுஞ்சாலைத் துறையிலும், பொதுப்பணித் துறையிலும் டெண்டர் விடப்பட்டுவருகிறது. சட்டரீதியாக அதிகாரம் இல்லாதவர்கள் இதுபோன்ற டெண்டர்களை விடலாமா? உயர் நீதிமன்றத்தில் இதற்காக வழக்குப் போட முடியுமா?

நிச்சயமாக வழக்குப் போடலாம். பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யலாம். பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தை மத்திய அரசோ, ஜனாதிபதியோ கேள்வி கேட்க முன்வராத நிலைமையில், நீதிமன்றம்தான் இறுதி நம்பிக்கை.

சம்பத்குமாரி, பொன்மலை.

மக்கள் விரும்பினால் எடப்பாடியுடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என்று தீபா கூறுகிறாரே?

மக்கள் விரும்பித்தான் இவர் கட்சி ஆரம்பித்தாரா?

சோ.பூவேந்தரசு, சின்னதாராபுரம்.

சசிகலா கைகாட்டியவர்களுக்கே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியதுதான் தவறாகப் போய்விட்டதா?

சசிகலா கைகாட்டியவர் களுக்கே சீட் வழங்கப்பட்டது என்பது உண்மையானால், இன்று தினகரனை ஆதரிப்பவர்கள் 118 பேராக அல்லவா இருந்திருப்பார்கள்? ஆனால், 18 பேர்தானே இருக்கிறார்கள். சசிகலாவால் கைகாட்டப்பட்டவர்கள் சிலர்தான் என்பது இதன்மூலம் தெரிகிறதா? கடந்த கால அ.தி.மு.க-வின் செயல்பாடுகளுக்கு சசிகலாவும் காரணம். ஆனால், சசிகலா மட்டுமே அனைத்துக்கும் காரணமல்ல.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘இதுவரை ஒன்பது முறை மத்திய அரசிடம் நிதி கேட்டும் ஒரு பைசாகூட வாங்க முடியவில்லை’ என்கிறாரே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி?

இது உண்மையாக இருக்குமானால், புதுச்சேரி மக்கள்மீது மத்திய பி.ஜே.பி அரசுக்கு இருக்கும் அக்கறையும் ஆர்வமும் அவ்வளவுதான் என்று முடிவுக்கு வரவேண்டி யிருக்கும். மாநிலத்தை காங்கிரஸ் ஆளலாம். அதற்காக, அந்த மாநிலத்தைப் புறக்கணிக்க நினைப்பது ஆரோக்கிய மானதல்ல. புதுவைக்கு நல்லது செய்வதற்காக வந்திருப்பதாகச் சொல்லும் ஆளுநர் கிரண் பேடி, இதையாவது செய்து தர வேண்டும்.

டி.சந்திரன், ஈரோடு.

‘உண்மைக்கு மாறான தகவல்களைத்தான் தந்தோம்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தருபவர்கள் அமைச்சர்களாக இருந்தால் அந்தத் துறை என்ன ஆகும்?

அந்தத் துறை மட்டுமல்ல, நாடே நாசமாகும்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

சுப்பிரமணியன் சுவாமி பி.ஜே.பி-யில் இருந்தாலும், அவரது தனிப்பட்ட கருத்துகளைத் தைரியமாகச் சொல்லி வருகிறாரே?

வெளியிலிருந்து சொந்தக் கருத்துகளைச் சொல்வதைவிட, உள்ளே இருந்து சொந்தக் கருத்துகளைச் சொல்வது குறைந்தளவு ஆபத்தைத்தான் விளைவிக்கும் என்று பி.ஜே.பி தலைமை நினைத்திருக்கலாம்.

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா முதல்வர் எடப்பாடிக்கு?

இரட்டை இலையைக் கொடுப்பதன் மூலம் பிரச்னை தீர்வதில் சிலருக்கு விருப்பமில்லை. பிரச்னை தொடர்ந்தால்தான் அந்தச் சிலருக்கு நன்மை.

நடிகர் மன்சூர் அலிகான்

‘மெர்சல்’ பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு எதிராகப் பேசிவரும் பி.ஜே.பி-யினர், கர்நாடகத்தில் ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்துப் பேசாதது என்ன மாதிரியான அரசியல்?

இதுதான் சுயநல அரசியல். தங்களுக்குச் சார்பானவர்களுக்கு மட்டும் சாதகமான நிலைப்பாடுகளை எடுப்பது சுயநல அரசியல்.

‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றி விமர்சனம் செய்யவில்லை. ‘எட்டு சதவிகித ஜி.எஸ்.டி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் தரும்போது, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் இல்லை?’ என்று விஜய் கேட்கிறார். இது அப்பட்டமான சினிமா வசனம். அவ்வளவுதான். ‘காற்றைக்கூட காசாக்கினார்கள்’ என்று 2ஜி ஊழலைப் பற்றி முந்தைய படத்தில் விஜய் பேசினார். அதுபோன்ற வசனம்கூட அல்ல இது. இந்த வசனத்தைக் கூடவா பி.ஜே.பி-யினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை!

பொன்னாரும், தமிழிசையும் எதிர்ப்புக் காட்ட, இது ஏதோ அரசியல் படம் என்ற முத்திரை விழுந்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்கள், மறைமுகமாக விஜய்க்கு நல்லது செய்துள்ளார்கள்.

கர்நாடகாவில், விஜய் படத்துக்கு எதிராக நடத்தப்படுவது இனப்பகை. அதனை பி.ஜே.பி கண்டித்திருக்க வேண்டும். ஆனால், கண்டிக்க மாட்டார்கள். அப்படிக் கண்டித்தால், அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் அங்குள்ள மக்கள் பி.ஜே.பி-க்கு வாக்களிக்க மாட்டார்கள் அல்லவா? அகில இந்தியக் கட்சிகள் அனைத்துக்கும் உள்ள சிக்கல்தான் இது.

படங்கள்: ஆ.முத்துக்குமார், வி.சதீஷ்குமார், கே.ரமேஷ்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!