Published:Updated:

ஸ்ரீதேவி உள்பட 108 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

ஸ்ரீதேவி உள்பட 108 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்
ஸ்ரீதேவி உள்பட 108 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: நடிகை ஸ்ரீதேவி, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், ராமநாயுடு, சர்மிளா தாகூர் உள்பட 108 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
 

ஸ்ரீதேவி உள்பட 108 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2013ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

அறிவியல் விஞ்ஞானிகள் பேராசிரியர் யஷ்பால் ரோத்தம், நரசிம்மா உள்பட 4 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், தயாரிப்பாளர் டி.ராமநாயுடு, பாடகி எஸ்.ஜானகி, நடிகை சர்மிளா தாகூர், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, மறைந்த பாடகர் ஜஸ்பால்சிங் பட்டி, தமிழகத்தை சேர்ந்த ராமமூர்த்தி தியாகராஜன், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்பட 24 பேர் பத்மவிபூஷன் விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.
 

ஸ்ரீதேவி உள்பட 108 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார்

தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, லட்சமி நாராயணா சத்யராஜூ, எஸ்.கே.எம்.மலியானந்தன், தொழில் அதிபர் ராஜ்ஸ்ரீபதி, பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் உள்ளிட்ட 80 பேருக்கு அவரவர் சார்ந்த துறைகளுக்கான பத்மஸ்ரீ விருதுக்கும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகைளில் இன்று நடந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 108 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

நடிகை ஸ்ரீதேவி, டிராவிட் உள்ளிட்டவர்கள் நேரில் வந்து குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டனர். மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா, ஜஸ்பால்பட்டி சார்பில் அவரது குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

மத்திய அரசு அறிவித்த பத்மவிபூஷன் விருதை பாடகி எஸ்.ஜானகி ஏற்கனவே புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.