Published:Updated:

மோடி விசாவுக்கு விண்ணப்பித்தால் வரவேற்போம்: அமெரிக்கா

மோடி விசாவுக்கு விண்ணப்பித்தால் வரவேற்போம்: அமெரிக்கா
மோடி விசாவுக்கு விண்ணப்பித்தால் வரவேற்போம்: அமெரிக்கா
மோடி விசாவுக்கு விண்ணப்பித்தால் வரவேற்போம்: அமெரிக்கா

வாஷிங்டன்: குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி விசா கோரி விண்ணப்பித்தால் அதனை வரவேற்பதாகவும், அவரது விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலன்ட், " அமெரிக்காவின் விசா கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை. அவர் ( மோடி) விசா கோரி விண்ணப்பித்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.அனைத்து விசா விண்ணப்பங்களும் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படும். அப்படி அவர் விண்ணப்பித்தால், விசா வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து முன்கூட்டியே என்னால் எதுவும் சொல்ல முடியாது' என்றார்.

##~~##
அமெரிக்காவின் குடியரசு கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று கடந்தவாரம் குஜராத்திற்கு சென்றிருந்தது. அப்போது மோடியை சந்தித்த அக்குழு அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தை தொடர்ந்து, மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா, தற்போது மோடி பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகும் சூழ்நிலையில், மேற்கண்டவாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.