Published:Updated:

ஏழைகள் பட்டியலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ - இது ஒடிசா கூத்து!

ஏழைகள் பட்டியலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ - இது ஒடிசா கூத்து!
ஏழைகள் பட்டியலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ - இது ஒடிசா கூத்து!
ஏழைகள் பட்டியலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ - இது ஒடிசா கூத்து!

புவனேஸ்வர்: அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்காக செல்வந்தர்களும், தங்களை வறுமைக் கோட்டில் இருப்பதாக‌ சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், ஒடிசாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே வறுமைக் கோட்டு பட்டி யலில் இருப்பதுதான் அதிசய‌மான ஆச்சரியம்!
 
ஒடிசாவில்  ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஸ்ரீநாத் சோரன். இவரது பெயர் 1997 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதற்காக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களும் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்த தகவல் பெறப்பட்டு பகிரங்கத்திற்கு வந்திருப்பதால் பரபரப்பாகிக் கிடக்கிறது ஒடிசா!
 
''சோரன் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு, உதலா பிளாக்கில் இருந்தார். அப்போது அவரது பெயர் வறுமைக்கோடு பட்டியலில் இல்லை'' என்கிறார்கள் சிவில் சப்ளை அதிகாரிகள். ஒருவேளை அவரது பெயரில் உள்ள  கார்டு, பொதுவிநியோக திட்டப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அதுபற்றி சரிபார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 

##~~##
சோரனோ, “அதுபோன்ற எந்த கார்டும் நான் வாங்க வில்லை. 2006 ஆம் ஆண்டு வரை அந்த கார்டில் குறிப்பிட்டிருந்த 2 ஆம் வார்டில் குடியிருந்தேன். அதன்பின்னர் போத்சிங்காரியா பகுதிக்கு குடிபெயர்ந்தேன். ஆனால், எப்படியோ என் பெயர் வறுமைக்கோடு பட்டியலில் வந்தது விட்டது. இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது” என்கிறார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சோரன் வெளியிட்ட சொத்து மதிப்பின்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்க ளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் எதையும் அவர் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையைச் சொல்லி சான்றிதழ் கேட்பவர்களைத் தான் ஆயிரம் கேள்விகள் கேட்டு அலைய விடுவார்கள் போலிருக்கிறது!
- குளஸ்