Published:Updated:

120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்!

120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்!
120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்!
120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்!

சென்னை: கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்," துபையில் இருந்து 19 ஈழத்தமிழர்களைக் கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ஏப்ரல் 2 ஆம் நாள், தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். தற்பொழுது மற்றொரு துயரம் நிகழ்ந்து உள்ளது. இன்று, (6.4.2013 ) அதிகாலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து, 120 ஈழத்தமிழர்கள், இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்று உள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர், பெண்கள், குழந்தைகள்.

##~~##
தமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில், அவர்கள் சென்ற படகுகளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, படகுகள் மூழ்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்து உள்ளது. 120 பேர்களுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையின் உதவியோடு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தங்களை வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதேப்போன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்கும் வைகோ இதே வேண்டுகோளை விடுத்துள்ளார்.