Published:Updated:

ரக்ஷிதா, பூஜா காந்தி கர்நாடக தேர்தலில் போட்டி...சூடு பறக்கும் கர்நாடக அரசியல்!

ரக்ஷிதா, பூஜா காந்தி கர்நாடக தேர்தலில் போட்டி...சூடு பறக்கும் கர்நாடக அரசியல்!
ரக்ஷிதா, பூஜா காந்தி கர்நாடக தேர்தலில் போட்டி...சூடு பறக்கும் கர்நாடக அரசியல்!

ரக்ஷிதா, பூஜா காந்தி கர்நாடக தேர்தலில் போட்டி...சூடு பறக்கும் கர்நாடக அரசியல்!

இந்தியாவிலே பரபரப்புக்கும் சலசலப்புக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத மாநிலம் கர்நாடகா. அதிலும் வருகிற மே மாதம் 5 ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருவதால் இப்போதே அனல் தகிக்கிறது. இந்தமுறை பி.ஜே.பி, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் மும்முனைப் போட்டியில் குதித்திருக்கும் வேளையில் ரெட்டி சகோதரர்களின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் வட கர்நாடகத்தில் தேர்தலில் குதித்து உள்ளது.

மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கர்நாடகத்தில் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக பேசாமல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் வேளையில் மும்முரமாகி உள்ளன. தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும்போதே ஆளுங்கட்சியான பி.ஜே.பி. முந்திக்கொண்டு 140 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தது. இதற்கு காரணம் எந்த நேரத்திலும் எடியூரப்பா கட்சிக்கு தாவலாம் என பி.ஜே.பி-யின் பிரமுகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று எடியூரப்பா சவால் விடுத்தார். ஆனால், இந்த முறை எங்களுடைய ஆட்சிதான் என்று மார்தட்டும் காங்கிரஸ் முதல் கட்டமாக 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது.

டெல்லியிலிருந்து காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வருவதற்கு அறிவிப்பதற்கு முன்பாகவே

ரக்ஷிதா, பூஜா காந்தி கர்நாடக தேர்தலில் போட்டி...சூடு பறக்கும் கர்நாடக அரசியல்!

பெங்களூருவில் இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் 'எனக்கு சீட் கொடு; அவனுக்கு கொடுக்காதே' என தள்ளுமுள்ளுவில் ஆரம்பித்து தீக்குளிப்பு முயற்சி வரை ஏரியாவே அதகளம் ஆகியது. அதிலும் இரண்டு தினங்களுக்கு முன்பு பெங்களூரு புறநகரை சாந்தகுமாருக்கு சீட் தரச் சொல்லி அவரது ஆதரவாளர்கள் முண்டியடித்ததில் ஒரு தொண்டருக்கு மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலே பலியானார்.

 
காங்கிரஸ் இப்படி என்றால்,தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 122 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இதில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ராம்நகரில் போட்டியிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமியின் இரண்டாவது மனைவி குட்டி ராதிகா தனக்கும் சீட் வேண்டும் என்று கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார். எடியூரப்பாவின் கே.ஜே.பி., பி.ஜே.பி-க்கு போட்டியாக ஆட்களை கவர்ந்து 127 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. மற்ற எந்தக் கட்சியும் கர்நாடகத்தில் 80 லட்சம் தமிழர்களுக்கு ஒரு சீட் கூட தராத சூழலில் எடியூரப்பா மட்டும் இரண்டு தமிழர்களுக்கு ஸீட் ‘வாரி’ வழங்கி இருக்கிறார். இதனால் தமிழர்கள் அவர் பக்கம் சாயவும் வாய்ப்பு இருக்கிறது.
ரக்ஷிதா, பூஜா காந்தி கர்நாடக தேர்தலில் போட்டி...சூடு பறக்கும் கர்நாடக அரசியல்!
மும்முனைப் போட்டியே விழி பிதுங்கி நிற்கையில், பெல்லாரி ரெட்டி பிரதர்ஸின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் முதல்கட்டமாக நடிகைகளை களம் இறக்கி கவர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. அந்தக் கட்சியின் சார்பில் ரெய்ச்சூரில் நடிகை பூஜா காந்தியும், சாம்ராஜ் நகரில் ரக்ஷிதாவும் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் அதிகாரியின் கடும் சட்டத்திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் மீறி ஆம்புலன்சிலும், பிரியாணியிலும் வைத்து பணம் பட்டுவாடா படு ஜோராக நடக்கிறது. கருத்து கணிப்புகள் காங்கிரஸிற்கு ஆதரவாகவே வந்தாலும், 'அதனை எல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம்' என மற்ற கட்சித் தலைவர்கள் தடாலடியாக அறிவித்து விட்டார்கள்.
மொத்தத்தில் கர்நாடகத்தில் மும்முனைப்போட்டி நிலவுவதால் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
கட்டுரை: -இரா.வினோத்
 
அடுத்த கட்டுரைக்கு