காங்கிரஸ் கட்சியின் மிக நீண்ட காலத் தலைவராக இருக்கும் பெருமைக்குரியவர் சோனியா காந்தி. 1998-ம் ஆண்டு முதல், 19 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் இருக்கிறார் சோனியா. உடல்நிலை காரணமாக மகன் ராகுல் காந்திக்கு வழிவிட்டு, அவர் ஒதுங்கப்போவதாக சில மாதங்களாகவே டெல்லி வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தன.

அண்மையில் நடைபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் புத்தக வெளியீட்டு விழாவின்போது, ‘‘விரைவில் ராகுல் தலைவர் ஆவார்’’ என்று சோனியா காந்தி தெரிவித்தார். அதன்படி, அக்டோபர் இறுதிக்குள் தலைவர் தேர்தலை முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தலைமையிலான காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பதற்குத் தயாராக இருந்தது. ‘அக்டோபர் 25-ம் தேதி ராகுல் தலைவராகப் பொறுப்பேற்பார்’ என எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், ராகுலின் பட்டாபிஷேகம் தள்ளிப்போயிருக்கிறது.

குஜராத், இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் அறிவிப்புகளும், வேட்பாளர் தேர்வு நடவடிக்கைகளுமே இதற்குக் காரணம் என காங்கிரஸ் வட்டாரங்கள் சொல்கின்றன. ஆனால், ராகுலுக்கு நெருக்கமானவர்கள் வேறொரு சென்டிமென்ட் காரணம் சொல்கிறார்கள்.

டிசம்பர் 31-க்குள் உள்கட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது. ஆனாலும், அக்டோபர் 25-க்குள் தேர்தலை முடிக்க இலக்கு நிர்ணயித்தார், ராகுல் காந்தி. அனைத்து மாநில நிர்வாகிகள், அகில இந்திய செயலாளர் நியமனங்களை அதற்குள் முடிக்கத் தீர்மானித்தார்கள். நாடு முழுவதும் பத்தாயிரம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இனி, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள், தேசிய அளவிலான நிர்வாகிகள் நியமனங்கள் நடைபெற வேண்டும். இதற்காக, காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டுமாறு, முறைப்படி தலைவர் சோனியா காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தச் சூழலில், ராகுலின் பட்டாபிஷேகம் தள்ளிப்போவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் பேசினார். ‘‘எதற்கு அவசரம்? எங்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளது. ராகுல், காங்கிரஸுக்கு மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் தலைமையேற்கத் தகுதிவாய்ந்தவர். இந்தத் தேசத்துக்குப் பிரதமராகப் பதவியேற்று வழிநடத்தவும் பொருத்தமானவர்’’ என்றார் அவர்.

கடந்தாண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம், ‘ராகுல், தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்’ எனப் பரிந்துரைத்தது. சோனியாவும், ‘ராகுலைத் தலைவராக்குவதை மேலும் தாமதிக்க வேண்டாம்’ என்று மூத்த தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லிவருகிறார். ஆனால், ‘குஜராத் தேர்தல் முடிந்த பிறகு பட்டாபிஷேகத்தை வைத்துக்கொள்ளலாம்’ என்று சில மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

குஜராத், இமாசலப்பிரதேச தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகின்றன. அதன்பிறகு தலைவர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே அவகாசம் இருக்கும். ‘தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்கும் என்பது நிச்சயமில்லாத நிலையில், எதற்காகக் காத்திருக்க வேண்டும்’ என வேறு சில தலைவர்கள் கேட்கிறார்கள். ராகுலும், ‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக குஜராத் தேர்தலில் பிரசாரம் செய்வேன்’’ என்று தனக்கு நெருக்கமான இளம் தலைவர்களிடம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இரு மாநிலத் தேர்தல்களில் அது புதிய உற்சாகத்தைத் தரும் என்று சோனியாவும் நினைக்கிறார்.

இந்தச் சூழலில், நவம்பர் இரண்டாம் வாரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூடி, தலைவர் அறிவிப்பை வெளியிட திட்டம் தயாராகிறதாம். நவம்பர் 14, கொள்ளு தாத்தா நேருவின் பிறந்த நாள். நவம்பர் 19, பாட்டி இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள். இதனையொட்டி தலைவர் பொறுப்பை ஏற்பது சென்டிமென்ட்டாக பொருத்தமாக இருக்கும் என்று ராகுல் நினைக்கிறாராம்.

இந்திராவின் நூற்றாண்டுப் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட, கர்நாடக மாநில சிக்மகளூரில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. எமர்ஜென்சிக்குப் பிறகு, 1977 தேர்தலில் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் தோற்றார். காங்கிரஸ் முதல்முறையாக தேசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தது. அதன்பிறகு, 1978-ல் நடந்த சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு இந்திரா வெற்றி பெற்றார். இரண்டே ஆண்டுகளில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

அந்த சென்டிமென்ட் தனக்கும் கைகொடுக்கும் என்பதால், தமது தலைவர் தேர்வும், அதற்கான முறையான கொண்டாட்டமும் கர்நாடகாவில் நடைபெற வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார். எனவேதான், காங்கிரஸ் மாநாட்டையும் பெங்களூரில் நடத்தத் திட்டமிடுகிறார்கள்.

டிசம்பர் 9 சோனியாவின் பிறந்தநாள். அதற்கு முன்பாக, மகன் கைக்குப் பொறுப்பு மாறவேண்டும் என்பதில் சோனியா உறுதியாக இருக்கிறார்.

- டெல்லி பாலா