Published:Updated:

திருச்சி புறநகருக்கு புதிய அதிமுக செயலாளர் நியமனம்!

விகடன் விமர்சனக்குழு

திருச்சி: திருச்சி அதிமுகவின் புதிய புறநகர் மாவட்டச்செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜெயலலிதா தலைமையில் 1991முதல் 1996 வரை  அமையப்பெற்ற அரசில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்தெடுக்கப்பட்ட இவர், இரண்டாம் முறையாக அன்பில் பொய்யாமொழி மறைவை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அதிமுகவில் மாநில அளவில் பல்வேறு பதவி வகித்த இவர் மாநில அமைப்புச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார், இதற்குமுன் திருச்சி மாவட்டம் ஒன்றிணைந்த பொழுது மாவட்டச்செயலாளராகவும் பணியாற்றிய நிலையில், மீண்டும் தற்பொழுது இவருக்கு தற்பொழுது புறநகர் மாவட்டச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.