Published:Updated:

நீதித்துறை வலிமையுடன் செயல்பட வேண்டும்: மன்மோகன் சிங்

நீதித்துறை வலிமையுடன் செயல்பட வேண்டும்: மன்மோகன் சிங்
நீதித்துறை வலிமையுடன் செயல்பட வேண்டும்: மன்மோகன் சிங்
நீதித்துறை வலிமையுடன் செயல்பட வேண்டும்: மன்மோகன் சிங்

புதுடெல்லி: "நாட்டின் முன்னேற்றத்துக்கு வலிமையான நீதித்துறை அவசியம் " என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்து இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

##~~##
அடித்தட்டு மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க நீதித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் நீதிபதிகள் இல்லை என்றார்.
டெல்லி மாணவி சம்பவமே சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வித்திட்டு உள்ளது என்றும் மகளிர் பாதுகாப்புக்கு தேவையான சட்ட சீர்திருத்த நடவடிக்கை முக்கியம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அனைத்து மாநில முதல்வர்களும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றார்.