Published:Updated:

தலையங்கம் - நீதியின் முன் வேண்டாம் அரசியல் மாயை!

தலையங்கம் - நீதியின் முன் வேண்டாம் அரசியல் மாயை!

பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம் - நீதியின் முன் வேண்டாம் அரசியல் மாயை!
தலையங்கம் - நீதியின் முன் வேண்டாம் அரசியல் மாயை!

ட்சியைவிட்டு மக்கள் இறக்கிய பிறகும் 'குடும்ப அரசியலைக் கைவிட முடியாது' என்பதில் தி.மு.கழகம் காட்டும் 'கொள்கைப் பற்று' இருக்கிறதே... அப்பப்பா!

மக்களையும் கட்சிக்காரர்களையும்விட, தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தி, அவர்களை உயர்த்திப் பிடிப்பதே கட்சியின் முக்கிய லட்சியம் என்று மறுபடியும் நாட்டுக்குக் கூச்சம் இன்றி உணர்த்தியிருக்கிறது கருணாநிதியின் தி.மு.க!

திகார் சிறைவாசத்தில் இருந்து கனிமொழி வந்திருப்பது ஜாமீனில்தான் என்றபோதும்... ஏதோ இறுதித் தீர்ப்பே வந்து அவரை நிரபராதி என்று அறிவித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் வண்ணம் வரவேற்பு திமிலோகப்பட்டு இருக்கிறது!

விமான நிலையம் தொடங்கி, வீடு வரை நீண்ட கூட்டமும்... படபடத்த கொடிகளும் தோரணங்களும்... முழங்கிய செண்டை மேளங்களும்... 'இனி நீ பூங்கொடி அல்ல... போர்க் கொடி' என்பது போன்ற வீராவேசக் கோஷங்களும்... அடடா! தேச விடுதலைக்குப் பாடுபட்டு சிறை சென்று மீண்ட எந்தவொரு தியாகச் செம்மலுக்கும்கூட இது வரை அளிக்கப்படாத ஆரவாரம்!

ராப்பிச்சை முதல் ராசா வரை நீதியின் முன் அனைவரும் சமம் என்பது நாளுக்கு நாள் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கும் இன்றைய ஆரோக்கியமான சூழ் நிலையில், நியாயமான வாதங் களையும் அசைக்க முடியாத ஆதாரங்களையும் முன்வைப்பது மட்டுமே ஒருவரைக் 'களங்கம் அற்றவர்' என்று காட்டுவதற்கான வழிமுறை. மாறாக, அரசியல் ரீதியான சோதனைகள் வரும் போது எல்லாம், மக்களிடம் ஒரு மாய பலத்தை உருவாக்கிக் காட்டுவதற்காகத் தொன்றுதொட்டுக் கையாளப்படும் 'கூட்டம் குவித்துக் காட்டும்' தந்திரம் இங்கே செல்லாது! வெற்று ஆரவாரங்கள் ஒருபோதும் நீதியின் பார்வையை மழுங்கடித்துவிடாது!

கனிமொழிக்கு மட்டும் அல்ல... சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக பெங்களூரு தனி நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும்போது எல்லாம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக அரங்கேற்றப்பட்ட அதிரடி ஆர்ப்பாட்டங்களுக்கும் இது நன்றாகவே பொருந்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு