Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபிறகு, அங்கு துப்பாக்கிக் கலாசாரம் அதிகமாகி, அதிகளவில் உயிர்பலியும் ஏற்படுவது ஏன்?


இதற்கும் ட்ரம்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துப்பாக்கிக் கலாசாரம் என்பது அங்கு சாதாரணமாக இருக்கிறது. எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அமெரிக்காவில் 27 கோடிப் பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்.

13,000 ரூபாய் கொடுத்தால், ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிவிட முடியும்.  அங்கு துப்பாக்கி விற்பனை இங்கு செல்போன் விற்பது போல சாதாரணமாக நடக்கிறது. இதுதான் அதற்குக் காரணம். மற்றபடி புஷ், ட்ரம்ப் காரணமல்ல.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

மக்கள்நலக் கூட்டணி மீண்டும் ஒன்று கூடுமா?

இந்தப் பெயரில் சில கட்சிகள் ஒன்று கூடுவார்கள். ஆனால், முன்பு அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் இடம் பெறாது. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இப்படிப்பட்ட புதிய கூட்டணிகள் உருவாக்கப்படுவது வழக்கம்தான்; தேர்தல் முடிந்ததும் கூட்டணி கலைந்து போவதும் வழக்கம்தான்.

பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை-1.

‘சசிகலா ஒரு பெண் பணியாளர்’ என்கிறாரே கே.பி.முனுசாமி?


பெண் பணியாளரை அ.தி.மு.க-வின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினராக உங்கள் அம்மா ஏன் ஆக்கினார் முனுசாமி? 2011-ம் ஆண்டு அவரைக் கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கும் வரை முனுசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் அவருக்குப் பணிந்து, கேட்டதையெல்லாம் செய்துகொடுத்தது ஏன்? அவரைத் தூக்கிச் சுமந்தது ஏன்?

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘‘தமிழக மக்களின் நிலையைப் பிரதிபலிக்கத் தவறிய அரசாக  அ.தி.மு.க ஆட்சி செயல்படுகிறது” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சொல்லியிருக்கிறாரே?


‘தமிழக மக்களின் நிலையை அ.தி.மு.க ஆட்சி பிரதிபலிக்கிறதா, இல்லையா?’ என்பது இருக்கட்டும். ஓ.பன்னீர்செல்வம் அணியை ஜி.கே.வாசன் ஆதரித்தார். இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எடப்பாடி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்துவிட்ட பிறகு ஜி.கே.வாசனின் நிலைப்பாடு என்ன? அதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லது.

ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை.

‘காங்கிரஸ் கட்சி இப்போது சிரிப்பு மன்றமாக மாறிவிட்டது’ என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?

இவ்வளவு கஷ்ட காலத்திலும் காங்கிரஸ்காரர்களால் மட்டும்தான் சிரிக்க முடியும். ராகுல் காந்தியைப் பார்த்தே இப்படிச் சொன்னால், திருநாவுக்கரசரைப் பார்த்தால் என்ன சொல்வாரோ?

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘டெல்லி மாநில அரசு கொண்டுவரும் திட்டங்களை கவர்னர் முடக்கிவைக்கக் கூடாது’ என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கருத்து தெரிவித்திருப்பது பற்றி..?


உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் மிக முக்கியமான வழக்கு இது. ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு அதிக அதிகாரமா, துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா?’ என்பதுதான் வழக்கின் சாரம்சம். டெல்லியில் முழுமையான அதிகாரம் பெற்ற மாநில அரசு பதவியில் இல்லை. ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு முடிந்தளவு குடைச்சல் கொடுக்கிறார்கள், இங்கே புதுவையில் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கிரண் பேடி குடைச்சல் கொடுப்பதைப் போல! 

அர்விந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றிய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் துணை நிலை ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார். ‘மாநில அரசின் எல்லா பரிந்துரைகளையும் கண்ணை மூடிக்கொண்டு துணைநிலை ஆளுநர் தடுக்கக் கூடாது. இந்த மோதலால் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேறுவதில் எந்தத் தடங்கலும் இருக்கக் கூடாது. இந்த மோதலுக்கான காரணம் என்ன?’ என்று அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இறுதித் தீர்ப்பு இன்னமும் வரவில்லை.

ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாக இவற்றைப் பார்க்காமல், இந்தியர்கள் வாழும் மாநிலங்களாகப் பார்த்தால் இந்தப் பிரச்னை எழாது.

கழுகார் பதில்கள்!

என்.கோபாலசாமி,
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்


மெத்தப் படித்து, நல்ல சம்பளத்தில், நல்ல பதவியில் இருக்கும் அதிகாரிகள்கூட லஞ்சத்தில் திளைப்பது ஏன்?

‘பணம் சேரச் சேரவும், பாலியல் விருப்பம் அனுபவிக்க அனுபவிக்கவும் அதிகமாகத்தான் ஆகும்’ என்பார்கள். முதல் தடவை செய்யும்போதுதான் அது தவறு. முதல் தடவைதான் கூச்சம் இருக்கும். பிறகு அது பழக்கமாகிவிடும். லஞ்சப் பணம் சேரச்சேர, சேர்க்கத் தூண்டும். இது ஒரு ‘மேனியா’தான்.

இதற்குப் படிப்பு, பதவி, நல்ல சம்பளம் ஆகியவை தடையாக இருப்பதில்லை. நம்முடைய படிப்பு, நல்லொழுக்கப் படிப்பாக இல்லாதபோது படிப்பு மட்டுமே ஒருவனை ஒழுக்கமுள்ளவனாக மாற்றிவிடுமா? ‘மார்க் வாங்கினால் போதும்’ என்பதுதான் இன்றைய கல்வியின் அளவுகோலாக இருக்கிறது. பதவி என்பது ஒரு காலத்தில் சேவையாக இருந்தது. இன்று அது அந்தஸ்தாக மாறிவிட்டது. அந்த அந்தஸ்தை எப்படியாவது மேலும் மேலும் கூட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். அதற்குப் பணம் பெரிய உதவி செய்கிறது. பணம் இந்தச் சமூகத்தில் ஒருவனின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் விஷயமாக மாறிய பிறகு, எதைச் செய்தாவது பணம் சம்பாதிக்க நினைக்கிறான். அதுதான் லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

‘மனிதர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த பூமி வளமுடையது. ஆனால், அவர்களின் பேராசைகளைத் திருப்தி செய்ய முடியாது’ என்றார் காந்தி. பேராசைக்கார அதிகாரிகளுக்கான தேசம் அல்ல இது.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!