Published:Updated:

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

Published:Updated:
திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

• ‘‘பாரதப் பிரதமர்... மன்னிக்கவும் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடக்கவுள்ளது.’’

• ‘‘மருத்துவமனையில் அம்மா இருந்தபோது, சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. ‘அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்’ என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பம் சொல்லச் சொன்னதைத்தான் வெளியில் வந்து சொன்னோம்.’’

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ‘‘அமெரிக்காவிலிருந்து ட்ரம்ப்பே வந்தாலும் எங்கள் ஆட்சியைக் கலைக்க முடியாது.’’

• ‘‘காய்கறிகள், கீரைகளில்தான் சத்து அதிகம். சிக்கன், மட்டன் எல்லாம் வேஸ்ட். சைவ உணவுகள் சாப்பிட்டால்தான் உடல் இளைக்கும்.’’

• “பரதநாட்டியத்தில்...” (மைதானத்தில் சிரிப்பலை எழுந்ததும், சுதா ரகுநாதன் பக்கம் திரும்பி) ‘‘ஏம்மா, நீங்க பரதநாட்டியம்தானே?” (‘‘பாடகி’’ என சுதா ரகுநாதன் சொல்ல) ‘‘பாடகி சுதா ரகுநாதன் அவர்களே!’’ 

• ‘‘மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் எல்லா விலங்குகளையும் பத்திரமாக மேடான பகுதிக்குக் கொண்டுபோய் வைத்துவிட்டோம்.’’

• ‘‘துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, டெங்கு பாதிப்பைச் சொல்லி, எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்.’’

திண்டுக்கல் சீனிவாசன் பொன்மொழிகள்

கேள்வி: ‘‘சென்னையில் மழையின்போது மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் இறந்துள்ளார்களே?’’

பதில்: ‘‘தம்பி... நான் திண்டுக்கல்ல இருக்கேன். அதைப்பத்தி எனக்கொண்ணும் தெரியாது. அங்க போனாத்தான் என்னன்னு தெரியும்.’’

கேள்வி: ‘‘போயஸ் கார்டனில் தீபா தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளதே?’’

பதில்: தம்பி... நான் காலையில 9 மணிக்குக் கிளம்பி, எல்லா இடத்துக்கும் போயிட்டு இப்பத்தான் இங்க வந்து நிக்குறேன். என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும். நான் வயர்லெஸ்ஸா வெச்சிருக்கேன்?’’

கேள்வி: ‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வெளிமாநிலத் தலைவர்களை அழைக்கும் திட்டம் உள்ளதா?’’

பதில்: ‘‘எம்.ஜி.ஆரைத் தமிழகத்தைத் தவிர்த்து யாருக்குத் தெரியும்? அதனால் அழைக்கும் திட்டம் இல்லை.’’

கேள்வி: ‘‘தினகரன் வீட்டில் நடைபெறும் ரெய்டு பற்றி?’’

பதில்: ‘‘எனக்குத் தெரியாதுப்பா... இப்பதான் நானே தூங்கி எழுந்து வர்றேன்.’’

- ஆர்.குமரேசன் 
ஓவியம்: பிரேம் டாவின்ஸி