காவிமயமாக்கும் பா.ஜ.க-வை வீழ்த்துவோம்! - முதல் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க எம்.பி-க்கள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.கஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர் தலைமையில் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது. இக்கூட்டத்தில், தி.மு.க-வின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு..
.
1. காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க-வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.
2. ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க அரசை ஒருபோதும் அனுமதியோம்.
3. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்.
4. காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்; கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை.
5. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலைசெய்ய தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசு கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.
6. பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, 10-ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் வெற்றிபெற ஒத்துழைப்போம்.
7. குட்கா ஊழலில் கொழித்த அமைச்சரை டிஸ்மிஸ் செய்க! டி.ஜி.பி-யைப் பதவிநீக்கம் செய்க.
8.ஊழல் அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், வரும் செப்டம்பர் 18-ம் தேதி, தி.மு.கழகத்தின் சார்பில் 'மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்'.
உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.