Published:Updated:

இந்திராவால்தான் அரசியலுக்கு வந்தேன்! - காங்கிரஸாரை நெளிய வைத்த ஸ்டாலின்

இந்திராவால்தான் அரசியலுக்கு வந்தேன்! - காங்கிரஸாரை நெளிய வைத்த ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “இந்திரா காந்திதான் தலித்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். மத்தியிலும் மாநிலத்திலும் மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும். மக்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால்தான் இதைச் சொல்கிறேன். அதற்கு இந்தக் கூட்டத்தை அடித்தளமாக வைத்துக்கொள்வோம்” என்று வெளிப்படையாகவே கூட்டணி பற்றிப் பேசினார்.

இந்திராவால்தான் அரசியலுக்கு வந்தேன்! - காங்கிரஸாரை நெளிய வைத்த ஸ்டாலின்
இந்திராவால்தான் அரசியலுக்கு வந்தேன்! - காங்கிரஸாரை நெளிய வைத்த ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், “முதலில் எங்களையெல்லாம் ஒன்றிணைத்த மோடிக்கு நன்றி. நாங்கள் பிரிந்துகிடந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான், அவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் வேண்டும். அதற்கு இந்த மேடையில் இருக்கும் தலைவர்களெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவுகள் வெற்றி பெறவேண்டும்” என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், ‘‘மக்களின் வங்கிக் கணக்குகளில் பணம் போடுவேன் என்று சொன்ன மோடி, நம் பாட்டிகளின் சுருக்குப்பையில் இருந்த சில்லறைகளைக்கூட பிடுங்கிவிட்டார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது’’ என்றார்.

தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணிக்கு அஸ்திரமாக, கோவையில் நவம்பர் 18-ம் தேதி நடந்த இந்திரா காந்தி பிறந்தநாள் நூற்றாண்டு விழாக் கூட்டம் அமைந்தது. அதில், 11 கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வென்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, இந்தக் கூட்டத்தில் ஓர் ஆச்சர்ய வரவு.

இந்திராவால்தான் அரசியலுக்கு வந்தேன்! - காங்கிரஸாரை நெளிய வைத்த ஸ்டாலின்

“மிசா சட்டத்தில் ஓர் ஆண்டு சிறையில் இருந்தேன்.அந்த அனுபவம்தான் என்னைத் தீவிர அரசியலில் இறக்கியது. இந்திராவால்தான் அரசியலுக்கு வந்தேன்” என்று பேசி, காங்கிரஸ்காரர்களை நெளியவைத்தார் மு.க.ஸ்டாலின்.

- குருபிரசாத்
படம்: க.விக்னேஷ்வரன்