Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

Published:Updated:
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பொலிட்டிகல் பொடிமாஸ்!
பொலிட்டிகல் பொடிமாஸ்!

விளையாட்டு இல்லை... ஊழல்!


‘‘எ
ன் தொகுதியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தை வைத்து விளையாடிவிட்டார்கள்’’ எனப் புலம்புகிறார், முன்னாள் அமைச்சரும் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ-வுமான டி.பி.எம்.மைதீன்கான். ‘‘அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள செயற்கை இழை ஓடுதளமே சாட்சி. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இதை அமைத்தார்கள். ஆனால், ஒரு மழைக்கே அந்த ஓடுதளம் பல்லிளித்துவிட்டது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கால்பந்து மைதானமும் குளம் போலக் காட்சியளிக்கிறது. கம்பு ஊன்றித் தாண்டும் போல்வால்ட் விளையாட்டுக்கான இடத்தில் உள்ள ஜம்பிங் செட், ஒரு மழைக்கே வீணாகிவிட்டது. கோடிக்கணக்கில் கொள்ளை நடந்துள்ளது. இதை நான் சும்மா விடமாட்டேன்’’ என்று குமுறுகிறார் மைதீன்கான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பூஜைக்கு வந்த தடை!

நெ
ல்லையில் நவம்பர் 18-ம் தேதி வ.உ.சி குரு பூஜை. அதில் கலந்துகொள்ள தூத்துக்குடிக்கு வந்தார் தினகரன். ‘திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜை செய்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும்’ என ஜோதிடர்கள் தந்த ஆலோசனையால், ஒருநாள் முன்பாகவே வந்தார். ஆனால், சென்னையிலிருந்து அவர் கிளம்பிய விமானம், தொழில்நுட்பக் கோளாறால் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதைத் தடையாக நினைத்து வருத்தப்பட்டாராம் தினகரன். தூத்துக்குடியில் அவசரகதியில் பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டு, திருச்செந்தூர் சென்று அவர் கோயிலுக்குள் நுழையும்போது இரவு மணி 8.55. அன்று, தினகரனுக்காக வழக்கத்தைவிட 40 நிமிடங்கள் கூடுதலாக கோயில் திறந்திருந்தது. பல தடைகளையும் தாண்டி பூஜையை முடித்தார் தினகரன்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

அமைச்சர் ஆட்கள் கிழித்த போஸ்டர்கள்!

மைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, தினகரன் அணியைச் சேர்ந்த கவிஸ்ரீ தினேஷ் என்பவரை மதுரை திருமங்கலம் போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்தனர். கவிஸ்ரீ தினேஷிடம் பேசினோம். ‘‘அம்மா வாழ்ந்த போயஸ் இல்ல வாசலில் கைகட்டி நின்றவர்கள், இப்போது நடந்த வருமானவரித் துறை சோதனையை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். இது அமைச்சர் உதயகுமாருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. அவர் சொன்னதால்தான் போலீஸ் அச்சுறுத்தப் பார்த்தது. ஆதாரமும் புகாரும் இல்லாததால் உடனே விடுவித்துவிட்டனர்’’ என்றார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

இந்த நிலையில், ‘‘சசிகலாவோ, தினகரனோ எனக்குப் பதவி தரவில்லை. என் உழைப்பாலும், எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாலும் முதல்வர் பொறுப்பு வந்தது’’ என்று எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசியது தினகரன் ஆதரவாளர்களை உசுப்பேற்றியுள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில், கடுமையான வாசகங்களுடன் பெரிய பெரிய போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டு வருகின்றன. ‘17-ம் தேதி நடந்த நிகழ்வை வரலாறு மன்னிக்காது’ ‘ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் வம்சமடா நாங்கள்’, ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என நேரடியாக விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட இந்த போஸ்டர்களை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் கிழித்துள்ளனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

தினகரன் திரட்டிய ஆவணங்கள்!

எம்
.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, வரும் 29-ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. அப்போது, மேரீஸ் கார்னர் மேம்பாலத்தைத் திறக்க வேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாகப் பாலப் பணிகளை மேற்கொண்டார்கள். இதனால், பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ‘‘மேம்பாலப் பணியில் ஊழல் நடைபெற்றிருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’’ என்றார். சமீபத்தில் தஞ்சை வந்த தினகரன், விரிசல் ஏற்பட்டுள்ள பாலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் திரட்டிச் சென்றுள்ளாராம். ‘அவர் என்ன செய்வாரோ’ என்ற பயத்தில் ஆளும் தரப்பினர் உள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரும்போது, முதல்வர் எடப்பாடிக்குக் கறுப்புக்கொடி காட்டவும் ஏற்பாடு நடக்கிறது.

- பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், ஏ.ராம், இ.கார்த்திகேயன்

படங்கள்:
கே.குணசீலன், எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்