Published:Updated:

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது அவசியம்: மோடி

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது அவசியம்:  மோடி
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது அவசியம்: மோடி
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது அவசியம்:  மோடி

புதுடெல்லி: இந்தியா வளர்ந்த நாடாகவும், தனது முன்னேற்ற இலக்கை அடையவும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற  வர்த்தகம் மற்றும்  தொழில் துறை கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய அவர், நவீன இந்தியா உருவாக  வேண்டும் என்றால்  பெண்களுக்கான அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

"பெண்களின் சக்தியை பயன்படுத்தி வெற்றி காண்பதில் குஜராத் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்கிறது. குஜராத்தில் பெண்கள் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டால், அதற்கு பதிவு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது தாயின் பெயரை மட்டுமே கேட்கிறோம், தந்தையின் பெயரை அல்ல.

நமது கலாச்சாரத்தில் தாய்க்கு மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மோசமான விஷயங்கள், நமது சமூகத்தை சீரழித்துவிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இருந்த பெண் சிசுக் கொலை இப்போது மீண்டும் துவங்கிவிட்டது. சில நேரங்களில் இந்தியாவில் 18

##~~##
ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட தற்போது மிக மோசமான சூழ்நிலை நிலவுவதாகத் தோன்றுகிறது. 21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசு கொலை நடந்து தான் வருகிறது. இதற்கு ஆண், பெண் என இரு தரப்பினருமே காரணமாக உள்ளனர்.
உண்மையில் தற்போது ஆண்களை விட இரு படி முன்னே பெண்கள் உள்ளனர். எனவே பெண்களின் சக்தியை நாம் உணர வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களைத் தான் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். தற்போது காலம் மாறிவிட்டது. இது வெறும் பொருளாதார ரீதியாக எடுக்கும் முடிவு அல்ல, ஆண்களின் எண்ணமே மாறிவிட்டதைத் தான் காட்டுகிறது" என்று மேலும் கூறினார்.